Ind vs Eng: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து ஸ்பின்னர்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து ஸ்பின்னர் இந்திய அணியில் முக்கிய வீரர்களான விராட் கோலி, ஷரேயாஸ் ஐயர் ஆகியோர் தொடரை விட்டு விலகியுள்ள இங்கிலாந்து அணியின் முக்கிய ஸ்பின்னரும், அனுபவ வீரருமான ஜேக் லீச் தொடரை விட்டு விலகியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஹைதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து விசாகபட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையுடன் உள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது. இதற்கிடையே எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணியில் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். அதே போல் முதுகு வலியால் அவதிப்பட்டும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயரும் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்திய அணியை போல் இங்கிலாந்து அணியிலும் முக்கிய ஸ்பின்னரும், அனுபவ வீரருமான ஜேக் லீச் காயம் காரணமாக தொடரை விட்டு வெளியேறியுள்ளார். இடது கை ஸ்பின்னரான 32 வயதாகும் ஜேக் லீச் அணியின் பிரதான ஸ்பின்னராக இருந்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போதே காயமடைந்துள்ளார்.
இதன் காரணமாக அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. லீச்சுக்கு பதிலாக வலது கை ஸ்பின்னரான ஷோயிப் பஷீர் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார். இந்த போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மூட்டு வலியால அவதிப்ட்டு வரும் லீச் நாடு திரும்பும் நிலையில் அவருக்கான மாற்று வீரராக யாரையும் இங்கிலாந்து அணி நிர்வாகம் தேர்வு செய்யவில்லை. தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணியில் ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லீ, ஷோயிப் பஷீர் என மூன்று ஸ்பின்னர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இந்த மூன்று பவுலர்களும் இந்திய மண்ணில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் டாம் ஹார்ட்லீ முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2, இரண்டாவது இன்னிங்ஸில் 7 என மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்ற்றினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்