England Innings: ‘ நெருப்புடா நெருங்குடா’! பும்ரா அனலில் சரிந்து விழுந்த இங்கிலாந்து பேட்டிங் - முன்னிலை பெற்ற இந்தியா
ஸ்பின்னை காட்டிலும் வேகப்பந்து வீச்சுக்கு சற்று சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டதற்கு ஏற்ப பும்ரா வீசிய பந்துகள் தெறிக்கவிடும் விதமாக இருந்தன. ஸ்டிரைக் ஸ்பின் பவுலரான அஸ்வினுக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை
இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகபட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்த இந்தியா கூடுதலாக 60 ரன்கள் மட்டும் எடுத்தது. சிறப்பாக பேட் செய்து வந்த ஓபனிங் பேட்ஸ்மே யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்தார். 209 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார்.
இங்கிலாந்து பவுலர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், சோயிப் பசீர், ரெஹான் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. 55.5 ஓவரில் 253 ரன்கள் எடுத்து இங்கிலாந்து ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா 143 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆரம்பத்தில் இருந்தே அட்டாக் ஆட்டத்தை வெளிப்படுத்தினர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட முயற்சித்தனர். இதனால் இந்திய பவுலர்களின் பந்து வீச்சை நாலாபுறம் பவுண்டரிகளை விளாசினர்.
இந்திய பவுலர்களில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மட்டும் சிறப்பாக பந்து வீசினார். அனல் கக்கும் விதமாக பவுலிங் செய்ததோடு, அவர் மட்டும் தான் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறடிக்க செய்தார். அத்துடன் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஓபனராக களமிறங்கிய ஜாக் கிராவ்லி அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக கேப்டன் ஸ்டோக்ஸ் 47 ரன்கள் எடுத்தார்.
தெறிக்கவிடும் விதமாக பந்து வீசிய பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் முக்கிய ஸ்பின்னராக அஸ்வின் விக்கெட்டுகள் எடுக்கவில்லை.
உடனடியாக இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா 13, ஜெய்ஸ்வால் 15 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். தற்போதைய நிலையில் 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பும்ரா சாதனை
45 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் பும்ராவுக்கு இது இந்திய மண்ணில் சிறந்த பவுலிங்காக அமைந்துள்ளது. அ்த்துடன் 150 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனைபுரிந்துள்ளார் பும்ரா.
அதேபோல், இந்திய மண்ணில் ஒரு இன்னிங்ஸில் விக்கெட் எடுக்காமல் அஸ்வின் இருப்பது இது 5வது முறையாகும். இதில் 3 முறை 10 ஓவருக்கும் குறைவாக அவர் பந்து வீசியுள்ளார்.
கடைசியாக 2019இல் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அஸ்வின் விக்கெட் எடுக்காமல் இருந்தார்.ஆனால் அந்த போட்டியில் அவர் 5 ஓவர்கள் மட்டுமே வீசினார்.
இன்றைய போட்டியில் 10 ஓவர்கள் வீசிய அஸ்வின், ஒரு மெய்டன் கூட வீசவில்லை. அத்துடன் ஒரு ஓவருக்கு 5 ரன்ரேட் விகிதத்தில் ரன்களை விட்டுக்கொடுத்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்