HT Cricket Special: அதிரடி பேட்ஸ்மேன், ஸ்விங் பவுலர், சிறந்த ஸ்லிப் பீல்டர் - இங்கிலாந்தின் 3D ஆல்ரவுண்டர் ஐயன் போத்தம்
அதிரடி பேட்ஸ்மேன், ஸ்விங் பவுலர், சிறந்த ஸ்லிப் பீல்டர் என இங்கிலாந்தின் 3D ஆல்ரவுண்டர் இங்கிலாந்து அணியில் ஜொலித்தார் அயன் போத்தம். அந்த அணியின் சிறந்த ஆல்ரவுண்டரிகளில் ஒருவராக திகழ்ந்த இவர் பலருக்கு இன்ஸ்பிரேஷனாகவும் இருந்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் தோன்றி சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்தவர் அயன் போத்தம். அதிரடியான பேட்ஸ்மேனாகவும், வேகப்பந்து வீச்சாளராக பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவராகவும், சிறந்த ஸ்லீப் பீல்டராகவும் இருந்துள்ளார் போத்தம்.
1980களில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக இருந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு முன்னரே 1976இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். இதன் பின்னர் 1977ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஷஷ் டெஸ்டில் அறிமுகமானார்.
ஒரு நாள் போட்டிகளை காட்டிலும் சிறந்த டெஸ்ட்கிரிக்கெட்டராக இருந்து வந்த போத்தம், மொத்தம் 102 டெஸ்ட் போட்டிகளில் 5,200 ரன்களும், 383 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 14 சதங்களை அடித்திருக்கும் இவர் 4 முறை 10 விக்கெட்டுகளும், 27 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
1979, 1983, 1992 என மூன்று முறை இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பை போட்டிகளில் களமிறங்கியுள்ளார். இதில், 1979, 1992இல் இங்கிலாந்து இறுதிப்போட்டி வரை வந்த தோல்வியை தழுவியது. 1986 முதல் 1988 வரை போத்தம் கிரிக்கெட் வாழ்வில் பொற்காலமாக அமைந்தது. இந்த காலகட்டத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து பவுலர் என்ற சாதனை புரிந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 100 ரன்கள், டக்அவுட் என்ற விநோத சாதனை இவர் வசம் உள்ளது. அதேபோல் சதமடித்து, இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகலை வீழ்த்திய பவுலராகவும் இவர் உள்ளது. ஆயிரம் ரன்கள், 50 விக்கெட்டுகள், 50 கேட்சளை பிடித்த வீரர், ஒரே போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேன் மற்றும் ஓபனிங் பவுலராக செல்பட்ட வீரர் என்ற பெருமையும் இவர் வசம் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து, அதே போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையும் புரிந்துள்ளார். போத்தமின் இந்த தனித்துவ சாதனைகளில் இருந்து அவரது ஆல்ரவுண்ட் ஆட்ட திறமையை பற்றி புரிந்து கொள்ளலாம்
இங்கிலாந்து அணிக்காக பென் ஸ்டாக்ஸ் செய்யும் பல விஷயங்களை 1980 காலகட்டத்தில் இங்கிலாந்து அணிக்காக செய்து பல வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளையும் பெற வைத்தவர் அயன் போத்தம்.
கிரிக்கெட் விளையாட்டு தவிர கால்பந்து விளையாட்டு மீதும் ஆர்வம் கொண்டவராக இருந்த இவர், 1978 முதல் 1985 வரை உள்ளூர் கால்பந்து லீக் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார். பென் ஸ்டாக்ஸ் போன்ற இந்த தலைமுறை வீரர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகவும், இங்கிலாந்து கிரிக்கெட்டில் விளையாடிய சிறந்த ஆல்ரவுண்டராகவும் இருந்து வந்த அயன் போத்தமுக்கு இன்று பிறந்தநாள்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்