HT Cricket Special: உலகக் கோப்பை வென்ற இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த இங்கிலாந்து கேப்டன்! ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் பிறந்தநாள்
ஆஷஷ் தொடரை வெல்வதென்பது இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்கும் வீரரின் கெளரவம் சார்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. அதை செய்து காட்டிய ஸ்ட்ராஸ் இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்தும் சாதித்தார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் முன்னாள் நிர்வாகியாக இருந்து வந்தவர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ். இடது கை ஓபனிங் பேட்ஸ்மேனான இவர் இங்கிலாந்து அணிக்காக மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
2003 முதல் 2012 காலகட்டம் வரை இங்கிலாந்து அணிகள் பெற்ற பல வெற்றிகளில் முக்கிய பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சமயத்தில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயலப்பட்ட வீரராக திகழ்ந்தார். 2009 ஆஷஷ் தொடரை இவரது கேப்டன்சியின் இங்கிலாந்து வென்றது.
இங்கிலாந்து அணியின் சிறந்த ஸ்லிப் பீல்டராக இருந்து வந்த ஸ்டாராஸ், அந்த அணியில் அதிக கேட்ச்கள் பிடித்த வீரராக உள்ளார். 2011 உலகக் கோப்பை தொடரின்போது இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
இதில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அத்துடன் கத்துக்குட்டி அணியான அயர்லாந்துக்கு எதிராக தோல்வியை தழுவியது. இவரது மோசமான பார்ம் காரணமாக கேப்டன்சியில் இருந்து விலகியதோடு, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வையும் அறிவித்தார்.
உலகக் கோப்பை தொடர் நடைபெற்ற அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் வந்த இந்தியாவை 4-0 என ஒயிட் வாஷ் செய்தார். அத்துடன் இங்கிலாந்து அணியை டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை படிக்க காரணமாக அமைந்தார்.
அறிமுக போட்டியில் சதம், இரண்டு இன்னிங்ஸிலும் சதம், அதி்க கேட்ச்கள், அதிக தொடர் நாயகன் விருது என பல்வேறு சாதனைகள் இவர் வசம் உள்ளது.
ஆஷஷ் கோப்பை தவிர வேறு பெரிய அளவில் கோப்பைகள் வெல்லாத போதிலும், இங்கிலாந்து அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்த வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக இருந்த ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் பிறந்தநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்