தமிழ் செய்திகள்  /  Cricket  /  Dinesh Karthik, Anuj Rawat Partnership Helps Rcb To Score Runs After Top Order Collapse

CSK vs RCB: ஒரே ஓவரில் இரண்டு முறை 2 விக்கெட்டுகள்! தினேஷ் கார்த்திக், ராவத் அதிரடி ஆர்சிபி ரன்குவிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 22, 2024 09:51 PM IST

டாப் ஆர்டர் சொதப்பியபோதிலும் மிடில் ஓவர்களில் இருந்து கடைசி ஓவர் வரை சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய தினேஷ் கார்த்தி - அனுாஜ் ராவத் ஆகியோர் ரன்கள் சேர்த்தனர். கடைசி 5 ஓவரில் குவித்ததால் ஆர்சிபி எடுத்துள்ளது.

இறங்கி வந்து சிக்ஸர் அடித்த அனுஜ் ராவத்
இறங்கி வந்து சிக்ஸர் அடித்த அனுஜ் ராவத் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக அனுஜ் ராவத் 48, தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் எடுத்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக டூ பிளெசிஸ் 35, விராட் கோலி 21 ரன்கள் எடுத்திருந்தனர்

சிஎஸ்கே பவுலர்களில் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆர்சிபி பேட்டர்களை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார். ஜடேஜா விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் 21 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். சிஎஸ்கேவின் மற்ற பவுலர்கள் பெரிதாக ஜொலிக்கவில்லை. 

ஓரே ஓவரில் 2 விக்கெட்

ஆர்சிபி அணிக்கு அதிரடியான தொடக்கத்தை தந்தார் அணியின் கேப்டன் டூ பிளெசிஸ். அடித்து விளையாடி வந்த டூ பிளெசிஸ் விக்கெட்டை ஆட்டத்தின் 4வது ஓவரை வீசிய முஸ்தபிசுர் ரஹ்மான் தூக்கினார். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கான விக்கெட் கணக்கை அவர் தொடங்கியுள்ளார். டீப் கவர் திசையில் இருந்து ஓடி வந்து அற்புதமாக கேட்ச் பிடித்த ரச்சின் ரவீந்திரா, பிளெசிஸ்ஸை வெளியேற்றினார். அவர் 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.

அதே ஓவரில் கடைசி பந்தில் புதிய பேட்ஸ்மேனாக களமிறங்கிய ராஜத் பட்டிதாரை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே பக்கம் ஆட்டத்தை திருப்பினார்.

இதன்பின்னர் ஆட்டத்தின் 11வது ஓவரை வீச வந்த முஸ்தபிசுர் ரஹ்மான், சிறப்பாக பேட் செய்து வந்த கோலியின் விக்கெட்டை தூக்கினார். அவர் 20 பந்துகளில் 21 ரன்கள் அடித்து வெளியேறினார்.

அதே ஓவரில் நன்றாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்ட பந்த கேமரூன் க்ரீனை, அற்புத ஸ்லோ பந்து வீச்சில் கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார் முஸ்தபிசுர். இதன் மூலம் ஒரே ஓவரில் இரண்டு முறை 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மேக்ஸ்வெல் டக் அவுட்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டரும் அதிரடி பேட்ஸ்மேனுமான மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். தீபக சஹார் வீசிய ஆட்டத்தின் 5வது ஓவரில், அவர் எதிர்கொண்ட முதல் பந்தில் அவுட்சைடு எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் தோனி வசம் சிக்கினார்.

தினேஷ் கார்த்திக் - அனுாஜ் ராவத் பார்ட்னர்ஷிப்

ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணி தடுமாறியது. அப்போது களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் - அனுாஜ் ராவத் ஆகியோர் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

ஆட்டத்தின் 15வது ஓவருக்கு பின்னர் இருவரும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. கடைசி 5 ஓவரில் மட்டும் ஆர்சிபி அணி 71 ரன்கள் அடித்தது. 

இவர்கள் இருவரும் இணைந்து 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point