தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Mi Vs Csk Innings Break: ஹாட்ரிக் சிக்ஸர்கள்! வான்கடவே அதிர வைத்த தல தோனி - அதிரடி தாண்டவமாடிய ருதுராஜ், டூபே

MI vs CSK Innings Break: ஹாட்ரிக் சிக்ஸர்கள்! வான்கடவே அதிர வைத்த தல தோனி - அதிரடி தாண்டவமாடிய ருதுராஜ், டூபே

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 14, 2024 09:30 PM IST

ருதுராஜ், ஷிவம் டூபே ஆகியோர் அதிரடியாக பேட் செய்து அரைசதமடித்தபோதிலும், கடைசி ஓவரில் 4 பந்துகள் மீதமிருக்கும் போது களமிறங்கிய தோனி ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து அதிரடி கேமியோவால் வான்கடே மைதானத்தில் ரசிகர்களை அதிரவைத்தார்.

சிக்ஸரை பறக்கவிட்ட தோனி
சிக்ஸரை பறக்கவிட்ட தோனி

ட்ரெண்டிங் செய்திகள்

ஐபிஎல் தொடரின் எல்கிளாசிக்கோ என்று அழைக்கப்படும் இரு எதிரி அணிகளின் மோதலாக இந்த போட்டி அமைந்துள்ளது. அத்துடன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் போட்டியாகவும் உள்ளது.

மும்பை அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேஷ் தீக்‌ஷனாவுக்கு பதிலாக மதிஷா பதிரனா சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்துள்ளது. சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 69, ஷிவம் டூபே 66,  ரச்சின் ரவீந்திரா 21 ரன்கள் எடுத்தனர்.

கடைசி ஓவரில் நான்கு பந்துகளை எதிர்கொண்ட தோனி மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார். 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் பவுலிங்கில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டை வீழ்த்தினார். ஜெரால்ட் கோட்ஸி, ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

கேப்டன் இன்னிங்ஸில் ஆடிய ருதுராஜ்

இந்த போட்டியில் ஓபனர்களாக ருதுராஜ் கெய்க்வாட் - அஜிங்கியா ரகானே ஆகியோர் களமிறங்கினார்கள். இதில் ரகானே 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

இதைத்தொடரந்து ருதுராஜுடன் இணைந்த ரச்சின் ரவீந்திரா கொஞ்சம் அதிரடி காட்டி விளையாடினார். 21 ரன்கள் அடித்த நிலையில் அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஆனால் தொடக்கத்தில் பொறுமையாகவும் பின்னர் அதிரடி மோடுக்கும் மாறி விளையாடினார் விளையாடினார் ருதுராஜ். அரைசதமடித்து கேப்டன் இன்னிங்ஸை வெளிப்படுத்திய ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்கள் அடித்தார். தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடித்தார்.

அத்துடன் 57 இன்னிங்ஸில் 2 ஆயிரம் ரன்களை கடந்த ருதுராஜ், ஐபிஎல் போட்டிகளில் அதி வேகமாக இதை செய்தவர் என்ற சாதனையும் புரிந்தார்.

டூபே அரைசதம்

கேப்டன் ருதுராஜ் உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த டூபே அதிரடியாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தார். அடிப்பதற்கு வாய்ப்பு இருந்த பந்துகளை பவுண்டரிகளை மாற்றிய டூபே அரைசதமடித்தார். கடைசி வரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்த அவர் 38 பந்துகளில் 66 ரன்கள் அடித்தார். அவர் தனது இன்னிங்ஸில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார்.

வான்கடேவை அதிர வைத்த தோனி பினிஷ்

ருதுராஜ் - டூபே இணைந்து 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன் பின்னர் ருதுராஜ் அவுட்டாக, டேரில் மிட்செல் பேட் செய்ய வந்தார். அவர் பெரிதாக அதிரடி காட்டாத நிலையில் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 2வது பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.

அவ்வளவுதான், அதன் பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக தல தோனி வான்கடே மைதானமே அதிரும் விதமாக பலத்த ஆராவாரத்துடன் பேட் செய்ய வந்தார். ஹர்திக் பாண்ட்யா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் கடைசி நான்கு பந்துகளை எதிர்கொண்ட தோனி, ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தார். மூன்று சிக்ஸர்களும் இமாலய சிக்ஸர்களாக இருந்த நிலையில் 4 பந்தில் 500 ஸ்டிரைக் ரேட்டுடன் 20 ரன்கள் அடித்து சிறந்த பினிஷர் என காட்டிவிட்டு சென்றார். தோனியின் ஒவ்வொரு அடிக்கும் இடிபோல் சத்தமும், ஆராவாரமும் எழுந்தன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point