தமிழ் செய்திகள்  /  Cricket  /  Delhi Capitals Sets 192 Runs Targetr For Csk

DC vs CSK Live score: அதிரடி காட்டிய டெல்லி டாப் ஆர்டர் - கட்டுப்படுத்திய சிஎஸ்கே பவுலர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 31, 2024 09:26 PM IST

டெல்லி கேபிடல்ஸ் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட, கடைசி கட்டத்தில் சிஎஸ்கே பவுலர்கள் கட்டுப்படுத்தினர்.

சிஎஸ்கே அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி கேபிடல்ஸ்
சிஎஸ்கே அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி கேபிடல்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் இரண்டு போட்டிகளை உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், வெளியூர் மைதானத்தில் முதல் போட்டியில் களமிறங்குகிறது.

டெல்லி பேட்டிங்

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52, ரிஷப் பண்ட் 51, ப்ருத்வி ஷா 43 ரன்கள் எடுத்தனர்.

சிஎஸ்கே பவுலர்களில் மதிஷா பத்திரனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா, முஸ்தபிசுர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

அதிரடி தொடக்கம்

டெல்லி அணிக்கு அதிரடியான தொடக்கத்தை ஓபனர்கள் டேவிட் வார்னர் - பப்ருத்வி ஷா தந்தனர். பவர்ப்ளேயில் பவுண்டரி சிக்ஸர்கள் என சிஎஸ்கே பவுலர்களை வெளுத்து வாங்கினார்.

இதனால் விக்கெட்டி இழப்பின்றி பவர்ப்ளேயில் 62 ரன்கள் குவித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 93 ரன்கள் சேர்த்தது. விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்ட வார்னர் அரைசதமடித்து, 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, 3 சிக்ஸ்கள் அடித்தார்.

ப்ருத்வி ஷா தன் பங்குக்கு அதிரடி காட்டி 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இவர் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்தார்.

ரிஷப் பண்ட் அரைசதம்

சிஎஸ்கே அணிக்கு எதிராக நல்ல சராசரி வைத்திருக்கும் ரிஷப் பண்ட், இந்த போட்டியிலும் தனது பார்மை தொடர்ந்தார். தனது பழைய பாணி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்த சீசனின் முதல் அரைசதத்தை அடித்தார். 32 பந்துகளில் 31 ரன்கள் அடித்த பண்ட் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார்

பதிரனா கலக்கல்

சிஎஸ்கே பவுலர்களில் சிறப்பாக பந்து வீசிய பதிரனா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டத்தின் 14வது ஓவரில் மிட்செல் மார்ஷ், ஸ்டப்ஸ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார்.

அத்துடன், முதல் விக்கெட்டான டேவிட் வார்னருக்கு, பறந்தவாறு அற்புத கேட்சை பிடித்தார்.

சிஎஸ்கே பவுலர்கள் தடுமாற்றம்

டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் சிஎஸ்கே பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினர். தீபக் சஹார் விக்கெட் எதுவும் எடுக்காமல் 42 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

முஸ்தபிசுர் ரஹ்மான் 47 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 43 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டும் எடுத்தார்.

அதேசமயம் பதிரனா, தேஷ்பாண்டே ஆகியோர் சிறப்பாக பவுலிங் செய்தனர். பதிரனா 31 ரன்கள் விட்டுக்கொடுத்து  3 விக்கெட்டுகள் எடுத்தனர்.துஷார் தேஷ்பாண்டே விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் 24 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point