தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Dc Vs Gt Result: அதிரடியில் கலக்கிய சாய் சுதர்சன்! ஒரே வெற்றியால் டாப் 4 இடத்தை நெருங்கிய டெல்லி கேபிடல்ஸ்

DC vs GT Result: அதிரடியில் கலக்கிய சாய் சுதர்சன்! ஒரே வெற்றியால் டாப் 4 இடத்தை நெருங்கிய டெல்லி கேபிடல்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 24, 2024 11:27 PM IST

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட, 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸரை மட்டும் அடித்த மூன்று பந்துகளை டாட் பால் ஆக்கினார். இறுதிவரை வெற்றிக்காக போராடிய குஜராத் டைட்டன்ஸ் 4 ரன்களில் தோல்வியை தழுவியது.

குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 ரன்னில் வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ்
குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 ரன்னில் வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் டெல்லி அணியில் டேவிட் வார்னர், லலித் யாதவ் ஆகியோருக்கு பதிலாக ஷாய் ஹோப், சுமித் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். குஜராத் அணி கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் விளையாடியது.

டெல்லி அதிரடி

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் அடித்தது.

இந்த போட்டியில் டெல்லி அணியின் பவுலிங் ஆல்ரவுண்ட்ர் அக்‌ஷர் படேல் மூன்றாவது பேட்ஸ்மேனாக புரொமோட் செய்யப்பட்டார். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்ட அவர் அரைசதமடித்தார். டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 88, அக்‌ஷர் படேல் 66, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 26, ஜேக்-பிராசர் மெக்குர்க் 23 ரன்கள் எடுத்தனர்.

குஜராத் பவுலர்களில் சிறப்பாக பவுலிங் செய்த சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நூர் அகமது ஒரு விக்கெட்டை எடுத்தார். அணியின் ஸ்டிரைக் பவுலரான மோகித் ஷர்மா 73 ரன்களை வாரி வழங்கி விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

குஜராத் சேஸிங்

மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த குஜராத் டைட்ன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது.

குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 65, டேவிட் மில்லர் 55, விருத்திமான் சாஹா 39 ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி போராடிய ரஷித் கான் 21 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். அணியை வெற்றிக்கு அருகே அழைத்து சென்றார்.

டெல்லி பவுலர்களில் இம்பேக் வீரராக களமிறக்கப்பட்ட ராஷிக் சலாம் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். அக்‌ஷர் படேல், முகேஷ் குமார், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

சாய் சுதர்சன், மில்லர் அதிரடி

குஜராத் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனும் கேப்டனுமான சுப்மன் கில் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து இம்பேக்ட் வீரராக வந்த சாய் சுதர்சன் ஆரம்பம் முதலே அதிரடியாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இவருடன் மற்றொரு ஓபனரான விருத்திமான் சாஹா ரன் குவிப்பில் ஈடுபட்டார். 25 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக லவந்த அஸ்மது்லலா உமர்சாய் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் மில்லருடன் இணைந்த சாய் சுதர்சன் தேவைப்படும் ரன் ரேட்டுக்கு ஏற்ப ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் மாறி மாறி பவுண்டரி, சிக்ஸர்களை அடித்தனர்.

அரைசதத்தை பூர்த்தி செய்த சாய் சுதர்சன் 39 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தனது இன்னிங்ஸில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார்.

அவர் அவுட்டான பிறகு அதிரடியை தொடர்ந்த மில்லர் டெல்லி பவுலர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் தெறிக்கவிட்டார்.

இதற்கிடையே ஷாருக்கான் 8, ராகுல் தெவாட்டியா 4 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள். அரைசதமடித்த பின்பு மில்லர் 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ரஷித் கான் போராட்டம்

பவுலிங்கில் சோபிக்காத சாய் கிஷோர் பேட்டிங்கில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் அடித்து 13 ரன்கள் எடுத்து சிறிய கேமியா ஆட்டத்தை வெளிப்படுத்தி அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் ஒற்றை ஆளாக போராடிய ரஷித் கான் 11 பந்தில் 21 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார், கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 14 ரன்கள் அடித்தார். இதனால் 4 ரன்னில் குஜராத் வெற்றியை நழுவவிட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point