Delhi Capitals Fined: சிஎஸ்கேவை வீழ்த்திய பின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அபராதம்! எதற்காக தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Delhi Capitals Fined: சிஎஸ்கேவை வீழ்த்திய பின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அபராதம்! எதற்காக தெரியுமா?

Delhi Capitals Fined: சிஎஸ்கேவை வீழ்த்திய பின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அபராதம்! எதற்காக தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 01, 2024 04:56 PM IST

சிஎஸ்கே அணியில் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பக்காவான திட்டத்தை தீட்டி அதை சரியாகவும் செயல்படுத்து வெற்றி பெற்றுள்ளது டெல்லி கேபிடல்ஸ். இந்த வெற்றிக்கு பின்னர் அபராதமும் செலுத்தியுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அபராதம்
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அபராதம் (AP)

இதைதத்தொடர்ந்து சேஸிங்கில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்த நிலையில், 20 ரன்களில் தோல்வியை தழுவியது.

உள்ளூர் மைாதானத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி கண்ட சிஎஸ்கே, வெளியூரில் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. சிஎஸ்கே புதிய கேப்டன் ருதுராஜ் கெயக்வாட் முதல் தோல்வியை சந்தித்துள்ளார்.

தோனி தரிசனம்

இந்த போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக எம்எஸ் தோனி பேட்டிங் செய்யும் வாய்ப்பு அமைந்தது. பலத்த ஆரவாரங்களுக்கு மத்தியில் களமிறங்கிய தோனி தனது vintage ஸ்டைல் ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர், பவுண்டரி என அதிரடி காட்டினார். தனது இன்னிங்ஸில் அவர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார்

16 பந்துகளில் 37 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. ஆனால் அதைப்பற்றி கவலை கொள்ளாத ரசிகர்கள், தோனியின் பழைய ஸ்டைல் ஆட்டத்தை 120 டெசிபிளுக்கு மேல் சப்தம் எழுப்பி மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

டெல்லிக்கு அபராதம்

இந்த போட்டியில் குறித்த நேரத்தில் பந்து வீசி முடிக்காத காரணத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முதல் முறையாக, குறித்த நேரத்தில் பந்து வீசாததன் தொடர்பாக ஐபிஎல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதால் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சிஎஸ்கே அணியை டெல்லி கேபிடல்ஸ் வீழ்த்தியபோதிலும், அபாராத தொகை செலுத்த வேண்டியதாகியுள்ளது.

முன்னதாக, ஆட்டத்தின் 18வது ஓவரிலேயே குறித்த நேரத்தில் பந்து வீசாத காரணத்தால் பவுண்டரி அருகே நான்கு பீல்டர்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஏற்பட்டது. அந்த நெருக்கடியை சிறப்பாக கையாண்டு போட்டியில் வெற்றியும் பெற்றது.

புள்ளிப்பட்டியல் விவரம்

சிஎஸ்கே அணி இந்த சீசனில் முதல் தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், முதல் இடத்தில் இருந்த அணி இரண்டாவது இடத்துக்கு கீழே இறங்கியுள்ளது. அதேபோல் இரண்டு தொடர் தோல்விக்கு பின்னர் முதல் வெற்றியை பெற்றிருக்கும் டெல்லி கேபிடல்ஸ் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அடுத்த போட்டி

டெல்லி கேபிடல்ஸ் தனது அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஏப்ரல் 3ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. அதேபோல் சிஎஸ்கே அணி தனது அடுத்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் 5ஆம் தேதி ஹைதராபாத்தில் வைத்து நடைபெறுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.