தமிழ் செய்திகள்  /  Cricket  /  Csk Training Camp Ahead Of Ipl 2024 Gets Underway

Chennai Super Kings: இன்னும் 20 நாள் தான் பாக்கி! விசில் சத்தம் பறக்குதா? பயிற்சியில் களமிறங்கிய சிஎஸ்கே வீரர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 02, 2024 05:48 PM IST

CSK training camp ahead of IPL 2024 gets underwayஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு இன்னும் 20 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணி தனது பயிற்சியை தொடங்கியுள்ளது.

பயிற்சியை தொடங்கிய சிஎஸ்கே அணியினர்
பயிற்சியை தொடங்கிய சிஎஸ்கே அணியினர்

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் பேட்ச் உள்ளூர் வீரர்கள் ஏற்கனவே வந்துவிட்ட நிலையில், வரும் நாள்களில் மீதமுள்ள வீரர்கள் பயிற்சி கேம்பில் இணையவுள்ளார்கள். தற்போது சிம்ரஜித் சிங், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், முகேஷ் செளத்ரி, பிரசாந்தி சோலங்கி, அஜய் மண்டல், தீபக் சஹார் ஆகியோர் சிஎஸ்கே அணியில் தற்போது இணைந்துள்ளனர்.

இதில் தீபக சஹார் கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து எந்த வகையான கிரிக்கெட்டும் விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் அணியில் இடம்பிடித்திருந்த போதிலும் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இதைத்தொடர்ந்து தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற தொடரில் அவர் அணியில் இடம்பெறவில்லை.

இதன் பின்னர், கடந்த மாதத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது பிட்னஸை நிருபித்தார் தீபக் சஹார். எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால், வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வாகலாம் என தெரிகிறது.

சிஎஸ்கே கேப்டனான எம்எஸ் தோனி, அணியில் இன்னும் தன்னை இணைத்துகொள்ளவில்லை. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தில் மனைவி சாக்‌ஷியுடன் பங்கேற்றார் தோனி. அவர் விரைவில் அணியுடன் தன்னை இணைத்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:  

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point