DC vs CSK Preview:சென்னை பேட்டர்களை கட்டுப்படுத்தும் பவுலர் - பக்கா பிளானுடன் டெல்லி!ஹாட்ரிக் வெற்றியை நோக்கும் சிஎஸ்கே
ஹாட்ரிக் வெற்றியை பெற வேண்டும் என சிஎஸ்கேவும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டும் என்ற நெருக்கடியுடன் டெல்லி கேபிடல்ஸ் அணியும் இன்றைய போட்டியில் பலப்பரிட்சை செய்ய இருக்கின்றன.

டெல்லி கேபிடல்ஸ் - சிஎஸ்கே இன்று பலப்பரிட்சை
ஐபிஎல் தொடரின் 13வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே விசாகபட்டினம் ஒய்எஸ்ஆர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. விசாகபட்டினம் மைதானம் டெல்லி அணியின் இரண்டாவது உள்ளூர் மைதானமாக இந்த சீசனில் உள்ளது.
அதன்படி டெல்லி அணி விளையாடும் முதல் உள்ளூர் போட்டியாகவும் அமைகிறது. முதல் இரண்டு போட்டிகளை உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், வெளியூர் மைதானத்தில் முதல் போட்டியில் களமிறங்கவுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியிருக்கும் டெல்லி கேபிடல்ஸ் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கவும் முதல் வெற்றியை பெற போராடும் எனவும் எதிர்பார்க்கலாம்.