தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Csk Fan: ஸ்கூல் பீஸ் கட்ட பணமில்லை! மகள்கள் ஆசை நிறைவேற்ற ரூ. 64 ஆயிரத்தில் பிளாக் டிக்கெட் வாங்கிய சிஎஸ்கே ரசிகர்

CSK Fan: ஸ்கூல் பீஸ் கட்ட பணமில்லை! மகள்கள் ஆசை நிறைவேற்ற ரூ. 64 ஆயிரத்தில் பிளாக் டிக்கெட் வாங்கிய சிஎஸ்கே ரசிகர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 12, 2024 06:04 PM IST

மகள்களின் ஆசையை நிறைவேற்ற, ஸ்கூல் பீஸ் கட்ட பணம் இல்லாத போதிலும் ரூ. 64 ஆயிரம் கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் நேரில் ரசிகர் ஒருவர் கண்டுகளித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

சிஎஸ்கே போட்டியை காண ரூ. 64 ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கிய நபர்
சிஎஸ்கே போட்டியை காண ரூ. 64 ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கிய நபர் (Instagram/teamchennaiin)

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் தனது 3,மகள்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ரூ. 64 ஆயிரம் கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கி கடந்த திங்கள்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை ரசிகர் ஒருவர் கண்டுகளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வைரலாகியுள்ளது. அவர் அதில் கூறியிருப்பதாவது

எனக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை, எனவே நான் அவற்றை கருப்பு நிறத்தில் வாங்கினேன். ஆக மொத்தம் ரூ.64,000 ஆக இருந்தது. நான் இன்னும் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை. ஆனால் நாங்கள் தோனியை ஒரே ஒரு முறை பார்க்க விரும்பினோம். நானும் எனது மூன்று மகள்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறினார்.

"இந்த டிக்கெட்டுகளை பெற எனது தந்தை மிகவும் கடினமாக உழைத்துள்ளார். தோனி விளையாட வந்தபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்" என்று அவரது இளம் மகள்களில் ஒருவர் கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை பார்த்த மகிழ்ச்சியுடன், சிஎஸ்கே ஜெர்சியுடன் வெளியேறிய இந்த நபர் தனது மகளுடன் விசில் அடித்து வெற்றி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.

மகள்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட பணம் இல்லை என்று கூறிவிட்டு, கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பதற்காக காசு செலவழித்திருப்பது பலரால் விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

"குழந்தைகள் கல்வியைவிட கிரிக்கெட் விளையாட்டு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இந்த விவகாரத்தை ஊதி பெரிதாக்க வேண்டாம்" என இன்ஸ்டா பயனாளர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

அதே எக்ஸ் பக்கத்தில் மருத்துவர் ஒருவர், "இந்த முட்டாள்தனத்தை வார்த்தைகளால் விவரிக்க முடிவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் இவரது இந்த செயலுக்கு ஆதரவு கருத்துகள் பகிரப்பட்டன

"அவரது குழந்தைகள் இந்த தருணங்களை போற்றுவார்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் இதைச் செய்த தங்கள் தந்தையைப் பாராட்டுவார்கள். எப்படியாவது பள்ளிக் கட்டணத்தை செலுத்தி விடுவார். நீண்ட கணக்குப் போட்ட பிறகுதான் அவர் டிக்கெட் வாங்கியிருக்கலாம்" என்று எக்ஸ் பயனாளர் ஒருவர் இதுபற்றி பதிவிட்டுள்ளார். 

சிஎஸ்கே வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக எம்.எஸ்.தோனி இந்த போட்டியில் பேட் செய்தார். 3 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு ரன் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point