தமிழ் செய்திகள்  /  Cricket  /  Csk Beat Rcb By 6 Wickets In Ipl 2024 Opener

CSK vs RCb Result: கேப்டனாக முதல் போட்டியில் பாஸ் ஆன ருத்து! சேப்பாக்கத்தில் ஆர்சிபிக்கு எட்டாக்கனியாக இருக்கும் வெற்றி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 22, 2024 11:58 PM IST

ஒரு ஓவரில் 2 பவுன்சர்கள் பவுலர்கள் வீசலாம் என்பதால், அதை பகடைகாயாக வைத்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்த முயற்சித்தது ஆர்சிபிக்கு பலன் அளிக்கவில்லை. சேப்பாக்கம் மைதனத்தில் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. சிஎஸ்கே கேப்டனாக முதல் போட்டியில் பாஸ் ஆகியுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்

பந்தை பவுண்டரிக்கு அடித்த சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திரா
பந்தை பவுண்டரிக்கு அடித்த சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திரா (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக அனுஜ் ராவத் 48, தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் எடுத்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக டூ பிளெசிஸ் 35, விராட் கோலி 21 ரன்கள் எடுத்திருந்தனர்

சிஎஸ்கே பவுலர்களில் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆர்சிபி பேட்டர்களை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார். ஜடேஜா விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் 21 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். சிஎஸ்கேவின் மற்ற பவுலர்கள் பெரிதாக ஜொலிக்கவில்லை.

சிஎஸ்கே சேஸிங்

இதைத்தொடர்ந்து சேஸிங்கில் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் ஓபனர்களான கேப்டன் ருதுராஜ், ரச்சின் ரவீந்திரா நல்ல தொடக்கத்தை தந்தனர். சிறப்பாக பேட் செய்த ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ரவீந்திரா - ரஹானே அதிரடி

ருதுராஜ் கெய்க்வாட்க்கு அடுத்தபடியாக களமிறங்கிய ரஹானே, ஓபனர் ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்து அதிரடியை வெளிப்படுத்தினார். இருவரும் இணைந்து விரைவாக 33 ரன்கள் சேர்த்தனர்.

சிக்ஸர், பவுண்டரி என ஆர்சிபி பவுலர்களை அடித்து துவத்தை ரச்சின் ரவீந்திரா 15 பந்துகளில் 37 ரன்கள் அடித்து வெளியேறினார். தனது இன்னிங்ஸில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளை அடித்தார்.

பின் நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய டேரில் மிட்செல்லும் தன்பங்குக்கு அதிரடி காட்டினார். இதனால் அணியின் ஸ்கோர் அதிகரித்ததுடன், தேவைப்படும் ரன்ரேட்டும் கட்டுக்குள் இருந்தது.

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்

அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த ரஹானே 27, டேரில் மிட்செல் 22 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதன் ஆட்டம் ஆர்சிபி பக்கம் லேசாக திரும்பியது. அத்துடன் அணியின் ரன்ரேட்டும் கொஞ்சம் குறைந்தது. அப்போது இம்பேக்ட் வீரராக ஷிவம் டூபே களமிறங்கினார். அவருடன் மற்றொரு இடது கை பேட்ஸ்மேனான ரவீந்திர ஜடேஜாவும் பேட் செய்தார்.

ஜடேஜா - டூபே பார்ட்னர்ஷிப்

அணியின் ஸ்கோர் நல்ல நிலையில் இருந்தபோதிலும் டாப் 4 விக்கெட்டுகளை இழந்தது சிஎஸ்கே. இந்த சூழ்நிலையில் அணிக்கு பார்ட்னர்ஷிப் ஆட்டம் தேவைப்பட்டது. இதை சரியாக ஜடேஜா - டூபே ஆகியோர் செய்தனர். இருவரும் இணைந்து ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர். அவ்வப்போது கிடைத்த வாய்ப்புகளை பவுண்டரி, சிக்ஸர்களாகவும் மாற்றினார்.

சிஎஸ்கே வெற்றி

இறுதியில் ஆட்டத்தின் 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணி இந்த சீசனின் முதல் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. ஷிவம் டூபே 34, ரவீந்திர ஜடேஜா 25 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த போட்டியில் இரு அணிகளிலும் எந்த பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்கவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

IPL_Entry_Point