Sreesanth: பண மோசடி புகார்! கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்பட மேலும் இருவர் மீது வழக்குப்பதிவு
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றபோது பிக்ஸிங் ஈடுபட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிருபனம் ஆகவில்லை. இதனால் அவருக்கு விதிக்கப்பட்ட தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2021ஆம் ஆண்டில் சையத் முஸ்தாக் அலி தொடரில் கேரள அணிக்காக விளையாடினார். இதையடுத்து ஸ்ரீசாந்த் மீது கேரளா மாநிலம் கண்னூரை சேர்ந்த சரீஷ் பாலகோபாலன் என்பவர் கேரளா போலீசிடம் மோசடி புகார் அளித்துள்ளார்.
அதில், "ஸ்ரீசாந்த் மற்றும் அவரது நண்பர்களான ராஜிவ் குமார், வெங்கடேஷ் கினி ஆகியோர் கடந்த 2019 ஏப்ரலில் தன்னை அணுகி, கர்நாடகா மாநிலம் கொல்லூரில் விளையாட்டு பயிற்சி மையம் தொடங்க இருப்பதாக கூறினர். அந்த பயிற்சி மையத்துக்கு ஸ்ரீசாந்த் பங்குதாரராக இருப்பதாக தெரிவித்த அவர்கள், தங்களிடம் முதலீடு செய்தால் தன்னையும் பங்குதாரராக நியமிப்பதாக தெரிவித்தனர். அவர்களின் பேச்சை நம்பி ரூ. 18.7 லட்சம் வரை முதலீடு செய்தேன். ஆனால் தற்போது வரை விளையாட்டு பயிற்சி மையத்தை தொடங்காமல் இருப்பதோடு, பணத்தை திருப்பி கேட்டபோதும் தராமல் ஏமாற்றி வருகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், அவரது நண்பர்கள் மீது ஐபிசி பிரிவு 420 படி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த புகார் தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்