Ravindra Jadeja: உலக கோப்பை வெற்றி எதிரொலி! கோலி வழியில் ஜடேஜா!சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்தார்!
Ravindra Jadeja: நேற்றைய தினம் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று இருந்தது. இந்த போட்டிக்கு பிறகு சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக விராத் கோலி ஓய்வை அறிவித்து இருந்தனர்.

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா அறிவித்து உள்ளார்.
உலக கோப்பையை வென்ற இந்தியா
நேற்றைய தினம் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று இருந்தது. இந்த போட்டிக்கு பிறகு சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக விராத் கோலி ஓய்வை அறிவித்து இருந்தனர்.
ஜடேஜாவின் இஸ்டாகிராம் பதிவு
இது தொடர்பாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கருத்து தெரிவித்து உள்ளார். அதில், "நன்றி நிறைந்த இதயத்துடன், டி 20 சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். பெருமையுடன் பாய்ந்து செல்லும் உறுதியான குதிரையைப் போல, நான் எப்போதும் எனது நாட்டிற்காக எனது சிறந்ததைக் கொடுத்துள்ளேன், மற்ற வகை கிரிக்கெட்டில் செயல்பாடுகள் தொடரும். டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு கனவு நனவானது. இது எனது வாழ்கையின் உச்சம். நினைவுகள், உற்சாகங்கள் மற்றும் அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி" என பதிவிட்டு உள்ளார்.