தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Pbks Vs Mi Result: கடைசி வரை போராடிய பஞ்சாப்! பிளான் செய்து வெற்றியை தன் வசமாக்கிய மும்பை இந்தியன்ஸ்

PBKS vs MI Result: கடைசி வரை போராடிய பஞ்சாப்! பிளான் செய்து வெற்றியை தன் வசமாக்கிய மும்பை இந்தியன்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 18, 2024 11:55 PM IST

ஒரு கட்டத்தில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து பஞ்சாப் கிங்ஸ் தடுமாறியபோது, சஷாங்க் சிங், அசுடோஷ் ஷர்மா இணைந்து அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றனர். ஆனாலும் துர்தஷ்டவசமாக பஞ்சாப் தோல்வியை தழுவியது

பஞ்சாப் கிங்ஸ் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி
பஞ்சாப் கிங்ஸ் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி

ட்ரெண்டிங் செய்திகள்

பஞ்சாப் அணியில் காயம் காரணமாக ஷிகர் தவான் இந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. எனவே சாம் கரன் அணியின் கேப்டனாக செயல்பட்டார். பஞ்சாப் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவுக்கு பதிலாக ரிலீ ரோசோவ் சேர்க்கப்பட்டார். மும்பை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

மும்பை ரன் குவிப்பு

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78, ரோகித் ஷர்மா 36, திலக் வர்மா 34 ரன்கள் எடுத்துள்ளனர்.

பஞ்சாப் பவுலர்களில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாம் கரன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ககிசோ ரபாடா ஒரு விக்கெட்டை எடுத்தார்.

பஞ்சாப் சேஸிங்

இதையடுத்து 193 இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. அத்துடன் இந்த சீசனில் முதல் முறையாக வெளியூர் மைதானத்திலும் வெற்றியை பெற்றுள்ளது. 

பஞ்சாப் அணியில் அசுடோஷ் ஷர்மா 61, சஷாங் சிங் 41 , ஹர்ப்ரீத் பிரார் 21 ரன்கள் அடித்தனர்.

மும்பை பவுலர்களில் ஜேரால்ட் கோட்ஸி, ஜஸ்ப்ரீத் பும்ரா தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர். ஆகாஷ் மத்வால், ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

மும்பை வேகத்தில் சரிந்த பஞ்சாப் டாப் ஆர்டர்

மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் கோட்ஸி, பும்ராவின் வேகத்தில் ஆட்டத்தின் 2.1 ஓவரில் டாப் நான்கு பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தடுமாறியது. டாப் 4 போட்ஸ்மேன்களான சாம் கரன் 6, பிரப்சிம்ரன் சிங் 0, ரிலீ ரோசோவ் 1, லியாம் லிவிங்ஸ்டன் 1 என அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

பின்னர் இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஹர்ப்ரீத் சிங் கொஞ்சம் நிதானமாக பேட் செய்து விக்கெட் சரிவை தடுக்க முயற்சித்தபோதிலும் 13 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து ஜித்தேஷ் ஷர்மா 9 ரன்னில் நடையை கட்டினார். 9.2 ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் 77 ரன்களுக்கு 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

சஷாங்க் சிங் - அசுடோஷ் ஷர்மா அதிரடி பார்ட்னர்ஷிப்

நல்ல பார்மில் இருந்து வரும் இவர்கள் இருவரும் மும்பை பவுலர்களுக்கு எதிராக போராட்டத்தை வெளிப்டுத்தினர். பவுண்டரி, சிக்ஸர்கள் என அதிரடி காட்சி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

நன்றாக பேட் செய்து வந்து சஷாங்க் சிங் 25 பந்துகளில் 41 ரன் எடுத்து பும்ரா பந்தில் வீழ்ந்தார். மறுபுறம் தொடர்ந்து சிக்ஸர்களாக பறக்க விட்டு வந்த அசுடோஷ் ஷர்மா அரைசதமடித்தார்.

மும்பை வசம் இருந்த போட்டியை பஞ்சாப் அணி வசம் கொண்டு வந்த அசுடோஷ் ஷர்மா எதிர்பாராத விதமாக பெரிய ஷாட் முயற்சியில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 28 பந்துகளில் 61 ரன்கள் அடித்த அவர் 7 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்தார்.

மாயஜாலம் செய்த மும்பை

இன்னிங்ஸ் தொடக்கத்தில் முக்கிய பேட்ஸ்மேன் விக்கெட்டுகளை தூக்கியபோதிலும், ஒரு கட்டத்தில் மும்பை அணி வசம் இருந்த வெற்றி வாய்ப்பு அப்படியே பஞ்சாப் வசம் சென்றது.

அந்த சமயத்தில் கோட்ஸ் ஷாட் பிட்ச் பந்து மூலம் அசுடோஷ் ஷர்மாவும், நன்றாக பேட் செய்து ரன் அடித்து வந்த ஹர்ப்ரீத் பிரார் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யாவும் சரியாக பீல்ட் செட் செய்து தூக்கினார்கள். இவர்களின் இருவரின் கேட்ச்களையும் முகமது நபி கச்சிதமாக பிடித்தார்.

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட துர்தஷ்டவசமாக ககிசோ ரபாடா ரன் அவுட்டானார். இதன்மூலம் மும்பை அணி இந்த சீசனின் மூன்றாவது வெற்றியை பெற்றது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point