தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Sa Final Toss: வெற்றிகூட்டணியுடன் களமிறங்கும் இரு அணிகள்! தலையெழுத்தை மாற்ற இருக்கும் 5 ஸ்பின்னர்கள்

IND vs SA Final Toss: வெற்றிகூட்டணியுடன் களமிறங்கும் இரு அணிகள்! தலையெழுத்தை மாற்ற இருக்கும் 5 ஸ்பின்னர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 29, 2024 07:54 PM IST

இந்தியா, தென் ஆப்பரிக்கா என இரு அணிகளும் அதே வெற்றிகூட்டணியுடன் களமிறங்குகிறார்கள். இந்த போட்டியின் தலையெழுத்தை மாற்ற இரு அணிகளை சேர்ந்த மொத்தம் 5 ஸ்பின்னர்களும் இடது கை பந்து வீச்சாளர்களாக இருக்கிறார்கள். ஹர்திக் பாண்ட்

வெற்றிகூட்டணியுடன் களமிறங்கும் இரு அணிகள், இந்த போட்டியின் தலையெழுத்தை மாற்ற இருக்கும் 5 ஸ்பின்னர்கள்
வெற்றிகூட்டணியுடன் களமிறங்கும் இரு அணிகள், இந்த போட்டியின் தலையெழுத்தை மாற்ற இருக்கும் 5 ஸ்பின்னர்கள்

டி20 உலகக் கோப்பை 2024ஐ யார் வெல்ல போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே பார்போடாஸில் நடைபெறுகிறது.

2007இல் முதல் முறையாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன் ஆனது இந்தியா. அதன் பின்னர் 2014இல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், இலங்கைக்கு எதிராக தோல்வியை தழுவி ரன்னர் அப் ஆனது.

தற்போது 10 ஆண்டுகள் கழித்து மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றிருக்கிறது.

தென் ஆப்பரிக்கா அணியை பொறுத்தவரை முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. எப்போதும் அரையிறுதி வரை தகுதி பெறும் அணியாக இருந்து வந்த தென் ஆப்பரிக்கா, தங்களது முந்தைய வரலாற்றை மாற்றி அமைத்து, முதல் முறையாக உலகக் கோப்பையை தன் வசமாக்கும் முனைப்பில் உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியா பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 2012 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர், இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற அணி தற்போது தான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இது 100வது டி20 போட்டியாக அமைந்துள்ளது. 

இந்திய அணி அதே வெற்றி கூட்டணியுடன் இந்த போட்டியிலும் களமிறங்கியுள்ளது. அதேபோல் தென் ஆப்பரிக்கா அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பிட்ச் நிலவரம்

பேட்ஸ்மேன்கள், பவுலர்களுக்கு என இருவருக்கும் சமமான உதவி புரியும் ஆடுகளமாக பார்போடாஸ் மைதானம் உள்ளது. இறுதிப்போட்டியில் நான்காவது ஆடுகளம் பயன்படுத்தப்படும் என கூறப்படும் நிலையில் பேட்ஸ்மேன்கள், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு உதவலாம் என கணிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து போட்டி தொடங்குவதற்கு முன்னர் பிட்சை ஆய்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் அயன் பிஷப், "பிட்ச் கடினமாக இருப்பது போல் தோன்றுவதால் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். அதேசமயம் பவுலர்களுக்கும் நன்கும் பவுன்ஸ் ஆகும் என நம்பலாம். எனவே பேட்ஸ்மேன், பவுலர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவலாம்" என்றார்.

30 சதவீதம் மழைக்கு வாய்ப்பு, காற்றின் வேகம் மணிக்கு 30 கிமீ, வெப்பநிலையும் 30 டிகிரி என அனைத்தும் முப்பதிலேயே உள்ளது.

இந்தியா - தென் ஆப்பரிக்கா இதுவரை

இந்த இரு அணிகளும் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 4, தென் ஆப்பரிக்கா 2 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடரிந்து இந்தியா வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் ஆவதோடு, Chokers என்ற அடைமொழி பெயரையும் இழக்கும். அது செய்யப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்ப்ரீத் பும்ரா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்

தென் ஆப்பரிக்கா: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரேஸ் ஷம்சி

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.