Ben Stokes: மூட்டு வலி ஆபரேஷனை முடித்து கையில் ஊன்றுகோல் உதவியுடன் ஸ்டோக்ஸ் பகிர்ந்த புகைப்படம்!
இந்தியாவுக்கு எதிரான தொடரை கருத்தில் கொண்டு இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மூட்டு வலிக்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனும், ஆல்ரவுண்டருமான 32 வயதாகும் பென் ஸ்டோக்ஸ் நீண்ட நாள்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், அதற்கான சிக்ச்சையை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து ஸ்டோக்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கையில் ஊன்றுகோல் உதவியுடன் லண்டனில் உள்ள க்ரோம்வெல் மருத்துவமனைக்கு வெளியே நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "உள்ளே வெளியே. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு (கத்தி பட எமோஜியுடன்). புத்துணர்வு முகாம் தொடங்குகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது மூட்டு வலியால் அவதிப்பட்டார் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ். இதைத்தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்டோக்ஸ், தொடரின் பாதியிலேயே வெளியேறினார்.
இதன் பின்னர் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஷ் டெஸ்ட் தொடரில், மூட்டு வலி காரணமாக கடைசி 3 போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் செய்யவில்லை. இதையடுத்து ஒரு நாள் போட்டிகளில் கடந்த ஆண்டே ஓய்வை அறிவித்த ஸ்டோக்ஸ், உலகக் கோப்பை 2023 தொடரில் கம்பேக் கொடுத்தார்.
ஆனால் எதிர்பார்த்தபடி பெரிய ஆட்டத்தை ஸ்டோக்ஸ் வெளிப்படுத்தவில்லை. இதையடுத்து வரும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இந்த போட்டிகள் ஜனவரி 25 முதல் மார்ச் 11 வரை ஹைதராபாத், விசாகபட்டினம், ராஜ்கோட், ராஞ்சி, தரம்சாலா ஆகிய மைதானங்களில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடரை கருத்தில் கொண்டு மூட்டு வலிக்கான அறுவை சிகிச்சையை தற்போது மேற்கொண்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ். அத்துடன் ஜூன் மாதம் வெஸ்ட்இண்டீஸில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்காக, 2024 ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதையடுத்து ஐபிஎல் 2023 தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய ஸ்டோக்ஸ் காயம் காரணமாக பெஞ்சில் தொடரின் பாதி வரை பெஞ்சில் அமரவைக்கப்பட்டார். பின்னர் கடைசி கட்டத்தில் தொடரை விட்டு வெளியேறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்