BAN vs NZ 1st Test: 10 விக்கெட்டுகளை அள்ளிய வங்கதேச பவுலர்.. முதல் டெஸ்டில் NZ-ஐ வீழ்த்தியது BAN
தைஜுல் முதல் டெஸ்டில் 10 விக்கெட்டுகளை அள்ளி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
சனிக்கிழமையன்று நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் தொடக்க ஆட்டத்தில் வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச இடது கை சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸில் தைஜுல் 109 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 75 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. சில்ஹெட் நகரில் முதல் டெஸ்ட் நவம்பர் 28ம் தேதி தொடங்கியது.
வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 85.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 310 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 317 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது வங்கதேசம். அதில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 100.4 ஓவர்களில் 338 ரன்களை எடுத்தது.
இதையடுத்து 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து விளையாடியது. வங்கதேச பவுலர் தைஜுல் 6 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றி பெற பங்களித்தார்.
நியூசிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 181 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 58 ரன்கள் விளாசினார்.
தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ம் தேதி மிர்பூரில் தொடங்குகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்