Bangladesh: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்..! புள்ளிப்பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முன்னேறிய வங்கதேசம்
நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கும் வங்கதேசம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 28ஆம் தேதி தொடங்கியது.
இந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச பவுலர் தஜுல் இஸ்லாம் முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளுடன் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஆட்டத்தின் கடைசி நாளான இன்று நியூசிலாந்து வெற்றிக்கு 219 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 3 விக்கெட்டுகளே இருந்தன. இதையடுத்து அந்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் தஜுல் இஸ்லாம்.
இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்ததது வங்கதேசம். அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஏற்கனவே இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா மூன்றாவது இடத்துக்கு சென்றுள்ளது. உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தான் 24 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் வங்கதேசம், மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேயா நான்காவது இடத்தில் உள்ளது.
எட்டாவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து புள்ளிகள் எதுவும் பெறவில்லை. தென் ஆப்பரிக்கா அணி இதுவரை ஒரு தொடரிலும் பங்கேற்காத நிலையில் கணக்கை தொடங்காமல் உள்ளது.
ஒரேயொரு டெஸ்ட் தொடரில் விளையாடி இரண்டு தோல்விகளை சந்தித்திருக்கும் இலங்கை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
அடுத்த வாரம் தென்ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்தியா, இம்மாத இறுதியில் தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்