BAN vs NED Preview: உலகக் கோப்பை 2023 தொடரிலிருந்து முதலில் வெளியேறப்போவது யார்? வங்கதேசம் - நெதர்லாந்து மோதல்
World Cup 2023, BAN vs NED Preview: வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்தபோதிலும் தங்களது பலத்தை வெளிப்படுத்துவதற்கான அமையும் இந்தப் போட்யில் தோல்வி அடையும் அணியும் உலகக் கோப்பை 2023 தொடரில் நாக்அவுட் செய்யப்படும் முதல் அணியாக இருக்கும்.
உலகக் கோப்பை 2023 தொடரின் 28வது போட்டி வங்கதேசம் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது. உலகக் கோப்பை 2023 தொடரில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் போட்டியாக இது அமைந்துள்ளது.
வங்கதேசம் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலும், நெதர்லாந்து கடைசி இடத்திலும் உள்ளன. இன்றைய போட்டியில் தோல்வியடையும் அணி உலகக் கோப்பை 2023 தொடரில் நாக்அவுட் போட்டிகளின் வாய்ப்பை முதலில் இழக்கும் அணியாக இருக்கும்.
இரு அணிகளும் பவுலிங்கை காட்டிலும் பேட்டிங்கில் தடுமாறும் அணிகளாகவே இருந்து வருகின்றன. அதிலும் வங்கதேசம் பவுலிங்கில் பெரிதான தாக்கத்தை வெளிப்படுத்தாமலே இருந்து வருகிறது. ஆனால் நெதர்லாந்து அணியை பொறுத்தவரை பவுலிங்கில் எதிரணியினருக்கு அ்ச்சுறுத்தலை வெளிப்படுத்தி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தவிர மற்ற போட்டிகளில் நெதர்லாந்து பவுலிங்கில் சிறப்பாகவே செயல்பட்டது. பலம் வாய்ந்த தென் ஆப்பரிக்கா அணியை தனது அற்புதமான பவுலிங்கால் வீழ்த்தி அந்த அணியை அப்செட்டாக்கி வெற்றியும் பெற்றுள்ளது.
வங்கதேசம் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியதோடு சரி, அதன் பின்னர் அனைத்து போட்டிகளிலும் அடிபணிந்து வருகிறது. வங்கதேசம், நெதர்லாந்து என இரண்டு அணிகளும் வளர்ந்து வரும் அணியாக இருப்பதால், தங்களது அணியின் பலத்தை நிருபிக்கும் விதமாக இருக்கும் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவே அமையும் என எதிர்பார்க்கலாம்
பிட்ச் நிலவரம்
பாரம்பரியாக ஈடன் கார்டன் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கே நன்கு சாதகமாக அமையும். இங்கு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை 2023 தொடரின் முதல் போட்டி என்பதால், பிரஷ்ஷான ஆடுகளம் தொடக்கத்தில் கொஞ்ச நேரம் பவுலர்களுக்கும் பின்னர் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் இன்று வறண்ட வானிலை நிலவும் எனவும் மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டிகளில் வங்கதேசம் - நெதர்லாந்து அணிகள் இதுவரை மோதவில்லை. மொத்தமாகவே ஒரு நாள் போட்டிகளில் இரண்டு முறை பலப்பரிட்சை செய்துள்ளன. இதில் தலா ஒரு வெற்றிகளை இரு அணிகளும் பெற்றுள்ளன.
ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடிய போட்டிகளில் வங்கதேசம், நெதர்லாந்து என இரு அணிகளும் தோல்வியை சந்தித்துள்ளன. இன்றைய போட்டியில் இரு அணிகளில் ஒன்று இங்கு முதல் வெற்றியை பதிவு செய்ய உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்