தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Lsg Vs Dc Innings Break: பவுலிங்கில் லக்னோவை கலங்கடித்த டெல்லி! சிறப்பான இன்னிங்ஸ் மூலம் கரைசேர்த்த பதோனி

LSG vs DC Innings Break: பவுலிங்கில் லக்னோவை கலங்கடித்த டெல்லி! சிறப்பான இன்னிங்ஸ் மூலம் கரைசேர்த்த பதோனி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 12, 2024 09:32 PM IST

பார்ம் இல்லாமல் தவித்து வந்த ஆயுஷ் பதோனி, முக்கியமான நேரத்தில் சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்து லக்னோ அணியை கரைசேர்த்துள்ளார்.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஆயுஷ் பதோனி
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஆயுஷ் பதோனி (ANI )

ட்ரெண்டிங் செய்திகள்

லக்னோ அணியில் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவுக்கு பதிலாக அர்ஷத் கான் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் லலித் யாதவ், குமார் குஷாக்ராவுக்கு பதிலாக குல்தீப் யாதவ், முகேஷ் குமார் அணிக்கு திரும்பியுள்ளனர்.

லக்னோ பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக இளம் பேட்ஸ்மேன் ஆயுஷ் பதோனி 55 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக கேஎல் ராகுல் 39, குவன்டைன் டி காக் 19 ரன்கள் எடுத்தனர்.

டெல்லி கேபிடல்ஸ் பவுலிங்கில் அற்புதமாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கலீல் அகமது 2 விக்கெட்டுகள், இஷாந்த் ஷர்மா, முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

டெல்லி பவுலர்கள் அபாரம்

தொடக்கத்தில் இருந்தே லக்னோ பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் விதமாக டெல்லி பவுலர்கள் பந்து வீசினார்கள். குவன்டைந் டி காக் 10 ரன்னில் நடையை கட்ட, அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 8. நிக்கேலாஸ் பூரான் முதல் பந்தில் டக் அவுட், இம்பேக்ட் வீரராக வந்த தீபக் ஹூடா 10 என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தார்.

பொறுமையாக பேட் செய்து ரன்குவித்து வந்த கேப்டன் கேஎல் ராகுலும் 39 ரன்கள் அடித்து வெளியேறினார். இதனால் 9.3 ஓவரில் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் அடித்திருந்தது லக்னோ

பொறுப்புடன் பேட் செய்த பதோனி

கடந்த சில போட்டிகளாக பார்ம் இல்லாமல் தவித்து வந்த பதோனி, லக்னோ அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது பொறுப்புடன் பேட் செய்தார். டெல்லி பவுலர்களை எந்த அச்சமும் இன்றி எதிர்கொண்ட அவர் ரன்குவிப்பில் ஈடுபட்டார். கடைசி வரை நிலைத்து நின்று பேட் செய்த பதோனி, இந்த சீசனில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடைசி கட்டத்தில் பதோனியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த அர்ஷத் கான் 20 ரன்கள் அடித்தார். இவரது ஸ்கோர் அணிக்கு முக்கிய பங்களிப்பாக அமைந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point