தமிழ் செய்திகள்  /  Cricket  /  Australia's Bbl Star Hospitalised After Being Struck On Head; Currently Stable

BBL Star Hospitalised: தலையில் தாக்கிய பந்து! மருத்து உதவியில் இருந்து வரும் பிக் பேஷ் லீக் வீரர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 05, 2024 05:52 PM IST

Sam Harper was hit on the head during a practice session at the MCG and was hospitalised immediately.

தாக்குதலுக்குள்ளான பிக்பேஷ் வீரர் சாம் ஹார்பர்
தாக்குதலுக்குள்ளான பிக்பேஷ் வீரர் சாம் ஹார்பர் (X)

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார். பந்து தலையில் தாக்கிய போதிலும் அவர் சுயநினைவுடனும், நிலையாகவும் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிராக மெல்போர்ன் ஸ்டார்ஸ் மோதும் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு தயார் ஆவதற்காக பயிற்சியில் ஈடுபட்டபோது சாம் ஹார்பர் காயமடைந்துள்ளார்.

கிராஸ் பேட் ஷாட் ஆட முயற்சித்தபோது அவரது தாடையில் பந்து தாக்கிய, தொண்டை பகுதியில் சிறிய வெட்டு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவத்தின் போது பந்து ஹெல்மெட் உள்ளே புகுந்து சிக்கி கொண்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின் உடனடியாக மருத்துவ குழுவினர் வந்து அவருக்கு தேவைப்பட்ட மருத்துவ உதவிகளை செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score stay connected with HT Tamil