தமிழ் செய்திகள்  /  Cricket  /  Australia Women Beat India Women By 190 In Third Odi And White Wash Odi Series

IND W vs AUS W: ஆஸ்திரேலியா மகளிர் ஹாட்ரிக் வெற்றி! தொடரை முழுவதுமாக இழந்த இந்திய மகளிர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 02, 2024 09:52 PM IST

ஆஸ்திரேலியா மகளிர் அணியின் தெறிக்கவிடும் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இந்திய மகளிர் 190 ரன்கள் வித்தியாசத்தில் மிக பெரிய தோல்வியை தழுவியது

ஆஸ்திரேலியா மகளிர் பவுலர் வேர்ஹாம் பந்தில் கிளீன் போல்டு ஆன இந்திய பேட்டர் ரிச்ச கோஷ்
ஆஸ்திரேலியா மகளிர் பவுலர் வேர்ஹாம் பந்தில் கிளீன் போல்டு ஆன இந்திய பேட்டர் ரிச்ச கோஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் முதலில் பேட்டிங் செய்து, 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா மகளிர் ஒபனிங் பேட்டர் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் சதமடித்து 119 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக மற்றொரு ஒபனிங் பேட்டரும், அணியின் கேப்டனுமான அலிசா ஹீலி 82 ரன்கள் அடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய மகளிர் பவுலர்களில் ஷ்ரேயங்கா பாடீல் 3, அமன்ஜோத் கெளர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஏற்கனவே 2-0 என தொடரை இழந்த இந்திய மகளிர் இன்று ஆறுதல் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையிலும், ஒரு நாள் தொடரை முழுமையாக இழப்பதை தவிர்க்க வேண்டிய கட்டாயத்திலும் சேஸிங்கில் களமிறங்கியது.

பேட்டிங்கை போல் பவுலிங்கிலும் கலக்கியது ஆஸ்திரேலியா மகளிர் அணி. இந்திய மகளிர் பேட்டர்கள் பெரிதாக ரன் குவிப்பில் ஈடுபடாமல் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் 32.4 ஓவரில் 148 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

இதன்மூலம் 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை முழுமையாக வென்றது.

இந்திய மகளிர் பேட்டர்களில் ஸ்மிரிதி மந்தனா 29, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்த் ஷர்மா ஆகியோர் தலா 25 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா மகளிர் பவுலர்களில் ஜார்ஜியா வேர்ஹாம் 3, அலனா கிங், அனாபெல் சுதர்லேந்து, மேகன் ஷட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதை ஆஸ்திரேலியா மகளிர் ஓபனிங் பேட்டர் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் வென்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score stay connected with HT Tamil