Aus vs Pak 2nd Test Day 1: வார்னர், கவாஜா விக்கெட் காலி: மழையால் ஆட்டம் நிறுத்தம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Aus Vs Pak 2nd Test Day 1: வார்னர், கவாஜா விக்கெட் காலி: மழையால் ஆட்டம் நிறுத்தம்

Aus vs Pak 2nd Test Day 1: வார்னர், கவாஜா விக்கெட் காலி: மழையால் ஆட்டம் நிறுத்தம்

Manigandan K T HT Tamil
Published Dec 26, 2023 10:13 AM IST

Australia vs Pakistan, live score, 2nd Test, Day 1: ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் 2-வது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

ஆஸி., வீரர் உஸ்மான் கவாஜா விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பாக்., வீரர்கள்
ஆஸி., வீரர் உஸ்மான் கவாஜா விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பாக்., வீரர்கள் (AFP)

பாகிஸ்தான் அணி ஆஸி.,க்கு சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸி., 360 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான், பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, ஆஸி., முதலில் பேட்டிங் செய்தது.

பாபர் அசாம் ஸ்லிப்பில் கேட்ச் பிடித்து வார்னரை 38 ரன்களில் வெளியேற்றினார். அகா சல்மான் பந்துவீச்சில் வார்னர் ஆட்டமிழந்தார். உஸ்மான் கவாஜா 42 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை ஹசன் அலி எடுத்தார்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத், பலத்த மழைக்குப் பிறகு மேகமூட்டமான நாளில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற பிட்ச் என்பதால் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. பாகிஸ்தானில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது.

ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்

பாகிஸ்தான் லெவன்: இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபீக், ஷான் மசூத் (கேப்டன்), பாபர் அசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், ஷாஹீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, மிர் ஹம்சா, அமீர் ஜமால்