U19 World Cup: ஆறாத காயம்! இரண்டே மாதத்தில் ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க இன்னொரு வாய்ப்பு - சாதிக்குமா இந்திய இளம் படை?-australia edge out pakistan by one wicket to face india in u19 world cup final - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  U19 World Cup: ஆறாத காயம்! இரண்டே மாதத்தில் ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க இன்னொரு வாய்ப்பு - சாதிக்குமா இந்திய இளம் படை?

U19 World Cup: ஆறாத காயம்! இரண்டே மாதத்தில் ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க இன்னொரு வாய்ப்பு - சாதிக்குமா இந்திய இளம் படை?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 08, 2024 11:00 PM IST

இந்திய சீனியர் அணியினர் ஆஸ்திரேலியாவிடம் உலகக் கோப்பையை பறிகொடுத்தனர். தற்போதுஅதே ஆஸ்திரேலியாவை பழிதீர்க்கும் வாய்ப்பு இந்திய இளம் படைக்கு கிடைத்துள்ளது.

ட்ரைவ் செய்யும் ஆஸ்திரேலியா யு19 பேட்ஸ்மேன் சாம் கோன்ஸ்டாஸ்
ட்ரைவ் செய்யும் ஆஸ்திரேலியா யு19 பேட்ஸ்மேன் சாம் கோன்ஸ்டாஸ்

ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் யு19 அணி 48.5 ஓவரில் 179 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. இதை சேஸ் செய்த ஆஸ்திரேலியா யு19, 49.1 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டியில் இந்தியா யு19 அணியை எதிர்கொள்கிறது.

முதல் அரையிறுதி போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதைத்தொடர்ந்து இறுதிப்போட்டியில் இந்தியா யு19 - ஆஸ்திரேலியா யு19 அணிகள் பலப்பரிட்சை செய்யவுள்ளன.

இந்த போட்டியானது வரும் ஞாயிற்றுகிழமை இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.