AUS vs WI: முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அறிமுக பவுலர்! 85 ஆண்டுக்கு பின் நிகழ்த்தப்பட்ட சாதனை
அறிமுக வீரராக களமிறங்கி தான் வீசிய முதல் பந்திலேயே முன்னணி பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை தூக்கி கவனத்தை ஈர்த்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப்.

முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் அறிமுக வீரர் ஷமர் ஜோசப் (AFP)
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்தது. அனுபவம் இல்லாத வீரர்களுடன் இந்த தொடரில் களமிறங்கியிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 188 ரன்களில் ஆல்அட்டானது. ஆஸ்திரேலியா பவுலர்களில் ஹசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலியா தொடர்ந்தது. இதில் ஆட்டத்தின் 8வது ஓவர் முதல் பந்தை வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுக வீரர் ஷமர் ஜோசப் வீசினார். அப்போது 12 ரன்களுடன் ஸ்டிரைக்கில் இருந்த ஓபனிங் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை தூக்கினார்.