Asia Cup 2023: அணிக்கு திரும்பிய ஷ்ரேயாஸ் ஐயர் - மழை குறுக்கீட வாய்ப்பு! டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Asia Cup 2023: அணிக்கு திரும்பிய ஷ்ரேயாஸ் ஐயர் - மழை குறுக்கீட வாய்ப்பு! டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

Asia Cup 2023: அணிக்கு திரும்பிய ஷ்ரேயாஸ் ஐயர் - மழை குறுக்கீட வாய்ப்பு! டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 02, 2023 02:54 PM IST

போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் சாரல் மழை பெய்த போதிலும், தற்போது மழை பொலிவு நின்ற நிலையில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

புாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு
புாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.  

போட்டி தொடங்குவதற்கு முன் பிட்ச் ரிப்போர்ட் குறித்து தெரிவித்த சஞ்சய் மஞ்சரேக்கர், “உயர்தரமான தனித்துவமான ஆடுகளமாக இருந்து வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வேகமும், ஸ்பின்னர்களுக்கு நன்கு சுழலும் என நம்பலாம். 

நல்ல பேட்ஸ்மேன் இந்த மைதானத்தில் சதம் அடிக்கலாம். போட்டிக்கான முடிவில் டிஎல்எஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்யலாம்” என்றார்.

அவரது கூற்றுப்படி போட்டிக்கு இடையே மழை குறுக்கீடு இருப்பதற்கான வாய்ப்பு இருந்து வரும் நிலையில், ஆட்டத்தை முடிவை பெற டிஎல்எஸ் முறை பெரும் பங்கு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சூழலில் ரோஹித் ஷர்மா, முதல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். பாகிஸ்தான் அணி ஆடும் லெவன் நேற்றே அறிவிக்கப்பட்ட நிலையில், டாஸ் நிகழ்வுக்கு பிறகு இந்தியா அணி ஆடும் லெவனை அறிவித்துள்ளது.

 இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்
 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.