Sarfaraz Khan: ’இப்படி ஒரு அப்பாவா! சப்ராஸ்கான் தந்தையை புகழ்ந்த ஆனந்த் மகேந்திரா!’ பரிசை ஏற்றுக்கொள்ள கோரிக்கை!
“ஒரு குழந்தைக்கு ஊக்கமளிக்க ஒரு தந்தைக்கு இருப்பதை விட சிறந்த குணங்கள் என்ன? ஒரு உத்வேகம் தரும் பெற்றோராக இருப்பதற்காக, நௌஷாத் கான் தார் பரிசை ஏற்றுக்கொண்டால் அது எனது பாக்கியம் & கௌரவம்”
கிரிக்கெட் வீரர் சப்ராஸ்கானின் தந்தைக்கு கார் பரிசு அளிக்க விரும்புவதாக தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.
நீண்ட காத்திருப்புக்கு பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திஅய் கிரிக்கெட் வீரர் சப்ராஸ்கான் அறிமுகம் ஆனார். அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதமடித்த 66 பந்துகளில் 62 ரன்கள் அடித்து ரன்அவுட்டானார். இவர் தனது இன்னிங்ஸில் 9 பவுன்டரி ஒரு சிக்ஸர் அடித்தார்.48 பந்துகளில் அரைசதமடித்த சர்ஃப்ரஸ் கான்அறிமுக போட்டியில் அதிக வேக அரைசதமடித்த அறிமுக வீரர் என்ற சாதனை படைத்தார்.
ஜடேஜா 99 ரன்கள் இருந்தபோது மிட் ஆன் திசையில் ரன் ஓடி முயற்சித்தார். எதிர் திசையில் இருந்த சர்ப்ரஸ் கான் வேகமாக கிரீஸை விட்டு வெளியேறினார். பந்து மார்க் உட் நோக்கி வேகமாக சென்றதால் தற்காப்பு முயற்சியில் பின்நோக்கி சென்றார் ஜடேஜா. கண் இமைக்கும் நேரத்தில் பந்தை ஸ்டம்ப் நோக்கி வீசி மார்க் உட், கிரீஸை விட்டு வெளியே இருந்த சர்ஃப்ரஸ் கான் எதிர்பாராத விதமாக அவுட் ஆனார்.
சர்ஃப்ரஸ் கான் விளையாட்டை மைதானத்தில் நேரில் கண்டுகளித்தனர் தந்தை நௌஷாத் கான் மற்றும் மனைவி ரோமானா ஜாஹூர். 48வது பந்தில் அரைசதம் விளாசிய சர்ஃப்ரஸ் கானுக்கு அவரது மனைவி ரோமானா ஜாஹூர் பிளெயிங் கிஸ் கொடுத்தார்.
அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு தந்தையை கட்டியணைத்து ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்திய சர்ஃப்ரஸ் கான் போட்டியில் அறிமுகமான சந்தோஷத்தில் தந்தை, மனைவியிடம் ஆனந்த கண்ணீரை சப்ராஸ்கான் வெளிப்படுத்தியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரபல தொழில் அதிபர் சப்ராஸ்கான், "'ஹிம்மத் நஹின் சோட்னா, பாஸ்!' [தைரியத்தை இழக்காதீர்கள்], கடின உழைப்பு. தைரியம். பொறுமை. ஒரு குழந்தைக்கு ஊக்கமளிக்க ஒரு தந்தைக்கு இருப்பதை விட சிறந்த குணங்கள் என்ன? ஒரு உத்வேகம் தரும் பெற்றோராக இருப்பதற்காக, நௌஷாத் கான் தார் பரிசை ஏற்றுக்கொண்டால் அது எனது பாக்கியம் & கௌரவம்" என பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு சில மணிநேரங்களுக்கு முன்பு பகிரப்பட்டது. அதன்பிறகு, இது 38,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைக் குவித்துள்ளது. இந்த ஷேர் மேலும் கிட்டத்தட்ட 2,700 லைக்குகளை சேகரித்துள்ளது. இந்த பதிவிற்கு மக்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
சப்ராஸ்கான் தனது கடின உழைப்பை உள்ளூர் போட்டிகளில் நிரூபித்துள்ளார், அவர் உண்மையிலேயே அதற்கு தகுதியானவர்!" என பலர் பதிவுகளை இட்டு வருகின்றனர்…
டாபிக்ஸ்