தமிழ் செய்திகள்  /  Cricket  /  Akash Deep Touches Mother's Feet After Getting India Cap, Family Gets Emotional

Akash Deep: தாயார் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பின் களமிறங்கிய ஆகாஷ் தீப் - முதல் 3 விக்கெட்டை தூக்கி அசத்தல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 23, 2024 11:35 AM IST

முதல் போட்டியில் களமிறங்குவதற்கு முன்பு இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப், தனது தாயாரின் கால்களை தொட்டு வணங்கி ஆசி பெற்று, கட்டியணைத்து வாழ்த்து பெற்றது உணர்ச்சிக்க மிக்க தருணமாக அமைந்தது.

தாயாரிடம் ஆசிர்வாதம் பெறும் ஆகாஷ் தீப்
தாயாரிடம் ஆசிர்வாதம் பெறும் ஆகாஷ் தீப்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் ஸ்பின்னரான ரெஹான் அகமது தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ராபின்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இளம் வீரர் ஆகாஷ் தீப் டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழங்கினார். ஆகாஷ் தீப் இந்திய டெஸ்ட் அணியில் 313வது வீரராக களமிறங்கியுள்ளார்.

ராகுல் டிராவிட்டிடம் தொப்பி வாங்கி வாழ்த்து பெற்ற பிறகு கேப்டன் ரோகித் ஷர்மாவை அவரை கட்டிபிடித்து வாழ்த்துகளை தெரிவித்தார். கடந்த போட்டியில் ஷர்ஃப்ரஸ் கான் டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை பெற்ற பின் குடும்பத்தாரின் வாழ்த்துகளை பெற்றது போல், ஆகாஷ் தீப்பும் தனது குடும்பத்தாரை சந்தித்தார்.

தனது தாயாரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றஆகாஷ் தீப், குடும்பத்தாரை கட்டியணைத்து வாழ்த்துகளை பெற்றார். இந்த நிகழ்வு உணர்ச்சி மிக்க தருணமாக இருந்த நிலையில், புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் , உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் வாய்ப்பை பெற்றுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த ஆகாஷ் தீப் தற்போது தேசிய அணிக்காக அறிமுக போட்டியில் களமிறங்கியுள்ளார்.

இந்த தொடரில் நான்காவது அறிமுக வீரராக இந்திய அணியில் களமிறங்கியுள்ளார் ஆகாஷ் தீப். விசாகபட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ராஜத் பட்டிதார் முதல் வீரராக அறிமுகமானார். இவரை தொடர்ந்து கடந்த டெஸ்ட் போட்டியில் ஷர்ஃப்ரஸ் கான், துருவ் ஜூரல் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். இவர்களுக்கு அடுத்தபடியாக நான்காவது டெஸ்டில் புதிய வீரராக ஆகாஷ் தீப்சேர்க்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ஆகாஷ் தீப் சிங்?

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ்க்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆகாஷ் சிங், 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆகாஷ் தீப் சிங் 30 முதல் தர போட்டிகள் விளையாடியிருக்கும் நிலையில், அவரது சராசரி 23.58 என உள்ளது. பிகார் மாநிலத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் 103 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்த தனது பார்மை இங்கிலாந்துக்கு எதிரான முதல் சர்வதேச போட்டியில் தொடர்ந்திருக்கும் ஆகாஷ் தீப் சிங் முதல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.  

இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் பென் டக்கெட்டை முதல் விக்கெட்டாக தூக்கியுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

IPL_Entry_Point