HBD Ajay Jadeja: கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, நடகரும் கூட! அஜய் ஜடேஜாவின் பிறந்த நாள் இன்று
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Hbd Ajay Jadeja: கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, நடகரும் கூட! அஜய் ஜடேஜாவின் பிறந்த நாள் இன்று

HBD Ajay Jadeja: கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, நடகரும் கூட! அஜய் ஜடேஜாவின் பிறந்த நாள் இன்று

Manigandan K T HT Tamil
Feb 01, 2024 06:30 AM IST

அவர் கிரிக்கெட் விளையாடுவதை விட்டுவிட்டு, 2015 ஆம் ஆண்டு டெல்லி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார்,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா (HT)

விளையாட்டில் முறைகேடு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், 3 ஜூன் 2000 அன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அவருக்கு கிரிக்கெட்டில் விளையாட வாழ்நாள் தடை விதித்தது, பின்னர் அந்த அமைப்பு அதை 5 ஆண்டுகளாகக் குறைத்தனர். ஜனவரி 27, 2003 அன்று டெல்லி நீதிமன்றம் அவரது தடையை நீக்கியது. இருப்பினும் அவரால் இந்திய கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட முடியவில்லை.

அவர் கிரிக்கெட் விளையாடுவதை விட்டுவிட்டு, 2015 ஆம் ஆண்டு டெல்லி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார், 2000 ஆண்டு வாக்கில் அவர் சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார். டான்ஸ் ரியாலிட்டி ஷோ ஜலக் திக்லா ஜாவில் போட்டியாளராக தோன்றினார் மற்றும் SET Max, AajTak, NDTV இந்தியா போன்றவற்றில் பணியாற்றினார்.

பிறப்பு

ஜடேஜா நவநகர் அரச குடும்பத்தில் பிறந்தார். கிரிக்கெட் பரம்பரையைக் கொண்டது. அவரது உறவினர்களில் கே.எஸ். ரஞ்சித்சின்ஜியும், கே.எஸ்.துலீப்சின்ஜியும் அடங்குவர். இவர்களது பெயர்களை தான் ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை என உள்ளூர் கிரிக்கெட்டிற்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

அஜய் ஜடேஜாவின் தந்தை தௌலத்சின்ஜி ஜடேஜா ஜாம்நகர் மக்களவையில் இருந்து 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது தாயார் கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்தவர். ஜடேஜா ஜெயா ஜெட்லியின் மகள் அதிதி ஜேட்லியை மணந்தார், இந்த தம்பதியருக்கு ஐமன் மற்றும் அமீரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

டெல்லி பாரதிய வித்யா பவனில் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். இதையடுத்து அவர் ராஜ்கோட்டில் உள்ள ராஜ்குமார் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு உறைவிடப் பள்ளி பிடிக்கவில்லை, ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அவர் 13 முறை அங்கிருந்து ஓடிவிட்டார். அவர் இறுதியாக டெல்லியில் உள்ள சர்தார் படேல் வித்யாலயாவில் சேர்ந்தார், அங்கிருந்து பள்ளிப்படிப்பை முடித்தார். இங்கு அவர் அதிதி ஜெட்லியை சந்தித்தார். பின்னர் உயர்கல்விக்காக டெல்லி இந்துக் கல்லூரிக்குச் சென்றார்.

அஜய் ஜடேஜா 1992 மற்றும் 2000-க்கு இடையில் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரராக இருந்தார், 15 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 196 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடினார். அவர் அந்தக் காலத்தில் இந்திய அணியில் சிறந்த பீல்டர்களில் ஒருவராக கருதப்பட்டார்.

ஜடேஜா சன்னி தியோல் மற்றும் சுனில் ஷெட்டியுடன் 2003 ஆம் ஆண்டு கேல் திரைப்படத்தில் நடித்தார். 2009 ஆம் ஆண்டு V.K.குமார் இயக்கிய பால் பால் தில் கே சாத் திரைப்படத்திலும் நடித்தார்.

ஜடேஜா பிரபல நடன நிகழ்ச்சியான ஜலக் திக்லா ஜாவின் முதல் சீசனில் போட்டியாளராக இருந்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.