AFG vs BAN Result: வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்..! முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா நாக் அவுட்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Afg Vs Ban Result: வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்..! முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா நாக் அவுட்

AFG vs BAN Result: வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்..! முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா நாக் அவுட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 25, 2024 11:00 AM IST

டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது ஆப்கானிஸ்தான். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணியை நாக் அவுட் செய்துள்ளது.

ரலாறு படைத்த ஆப்கானிஸ்தான், முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி
ரலாறு படைத்த ஆப்கானிஸ்தான், முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி (AP)

அத்துடன் மிக முக்கியமாக ஆஸ்திரேலியா அணி தொடரை விட்டு வெளியேறிவிடும். அதே சமயம் வங்கதேசம் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அரையிறுதியில் நுழையலாம்.

ஆப்கானிஸ்தான் பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. வங்கதேசத்தின் அற்புத பவுலிங்குக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் குவிக்க தடுமாறினார்கள்

அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 43, ரஷித் கான் 19 ரன்கள் அடித்தனர். வங்கதேச பவுலர்களில் ரிஷாத் ஹூசைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தஸ்கின் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

வங்கதேசம் சேஸிங்

116 ரன்கள் என்ற குறைவான இலக்கை சேஸ் செய்த வங்கதேசம் அணி 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் என எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதன் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கிபோது 19 ஓவரில் 114 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாறியது.

தொடர்ந்து 12 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்த நிலையில் மறுபடியும் மழை பெய்ததால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டு பின் தொடங்கியது.

மூன்றாவது முறையாக 17.4 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தபோது லேசான சாரல் மழை பெய்து சில நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஒரு விக்கெட் எடுத்தால் வெற்றி என்று ஆப்கானிஸ்தான் அணி இருந்தபோது, சிறப்பாக பவுலிங் செய்து ஸ்டிரைக்கில் இருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் விக்கெட்டை வீழ்த்தியது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் வெற்றியால் ஆஸ்திரேலியா அணியும் தொடரை விட்டு வெளியேறியுள்ளது.

வங்கதேச இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் லிட்டன் தாஸ் 54, டவ்ஹித் ஹிர்தாய் 14 ரன்கள் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் பவுலர்களில் நவீன்-உல்-ஹக், ரஷித் கான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஃபசல் ஃபரூக்கி, குலாப்தீப் நயீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

லிட்டன் தாஸ் போராட்டம் வீண்

வங்கதேச பேட்ஸ்மேன்கள் அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் பொறுப்புடன் பேட் செய்து விக்கெட் சரிவை தடுத்ததுடன், ரன் குவிப்பிலும் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து பெரிய பார்ட்னர்ஷிப் அமையவில்லை. 

அரைசதமடித்த லிட்டன் தாஸ் கடைசி வரை அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனால் துர்தஸ்டவசமாக மற்ற பேட்ஸ்மேன்கள் அவுட்டானதால் வங்கதேசம் தோல்வியை தழுவியது. கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த லிட்டன் தாஸ் 49 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.