Guru Transit: ரிஷபத்தில் சஞ்சரிக்கப்போகும் குரு.. கடைக்கண் பார்வையில் கோடீஸ்வரர்கள் ஆகப்போகும் ராசிகள்
குரு பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
குரு பகவான், ஒன்பது கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும் அதிர்ஷ்டமான கிரகமாகவும் இருக்கிறார். மங்கல நாயகனாக விளங்கக்கூடிய இவர் எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களை கொடுக்கக் கூடியவர். இந்தாண்டு வரும் மே மாதம் 1ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார்.
இந்த குரு பெயர்ச்சியின்மூலம் பிரபல்யம், உடல்நல மேன்மை, கல்வி, தொழிலில் வெற்றி, குழந்தைப்பேறு உள்ளிட்ட பல்வேறு செல்வங்கள் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சியால் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் ஏற்றம் காணப்போகும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம்: நடைபெற்று முடிந்த குரு பெயர்ச்சியின் அருளால், மேஷ ராசியினருக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நல்வாய்ப்புகள் நிறைய வரும். சரியாக முயற்சித்தால் வெற்றி கிடைக்கும். புதிய வேலைக்கு முயன்றால் விஜயம் தான். பணவரவு கிடைப்பது உறுதி. ரொம்பநாட்களாக வீடு வாங்காமல் இருந்தீர்கள் என்றால் வாங்குவீர்கள்.
ரிஷபம்: இந்த ராசிக்கு குரு பெயர்ச்சியினால் எண்ணியவை எளிதில் நடக்கும். செயல்திட்டத்தினை வகுத்து செயல்பட்டால் ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும். நிறைய நாட்கள் உடலில் இருந்த நோய்கள் தீரும். பல்வேறு ஊர்களுக்குப் பயணப்பட்டு புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள்.வீடுகளைப் புனரமைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
கடகம்: குரு பெயர்ச்சியால் கடகராசியினருக்கு இழந்த நற்பெயர் கிட்டும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். சிறுவியாபாரிகளுக்குச் சாதகமான சூழல் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இல்லறத்துணையுடன் இருந்த பிணக்குகள் மறையும்.
கன்னி: குரு பெயர்ச்சியால் நன்மைபெறும் ராசிகளுள் கன்னி ராசியும் ஒன்று. குடும்பத்தில் இருந்த மனக்குழப்பம் தீரும். இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் மேம்படும். புத்திரவழியிலிருந்த பிரச்னைகள் தீரும். நிம்மதி மேலோங்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்