குரு 5 மாதம்.. விடாமல் விரட்டியடிக்கும் 3 ராசிகள்.. ஏப்ரல் வரை ஜாக்பாட் உங்களுக்கு தான்..!
Lord Guru: குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மூலம் யோக வாழ்க்கையை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Guru: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான் இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார் குரு பகவானின் செயல்பாடு ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
குருபகவான் தனது ராசி சக்கரத்தை முடிப்பதற்கு 12 ஆண்டுகள் ஆகும் குரு பகவான் என்ற ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது சந்திர பகவானின் சொந்தமான நட்சத்திரம் ஆகும். வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் குரு பகவான் பயணம் செய்வார். குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மூலம் யோக வாழ்க்கையை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
சிம்ம ராசி
குருபகவான் உங்கள் ராசியில் 11 வது வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கக்கூடும். இவருடைய நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நன்மைகளை கொட்டி தரும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
கடக ராசி
குருபகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தர போகின்றது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
ரிஷப ராசி
குருபகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்து வெற்றிகரமாக முடிவடையும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கு ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகளால் முன்னேற்றம் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். சொந்த வாழ்க்கையில் உங்களுக்கு பெரிய முன்னேற்றம் கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.