Sukran: துலாம் ராசியில் ஏறும் சுக்கிரன்.. பணமூட்டையை சம்பாதித்து பிகிலுவிட்டு ரவுசுகாட்டப்போகும் ராசிகள்
Sukran: துலாம் ராசியில் ஏறும் சுக்கிர பகவானால், பணமூட்டையை சம்பாதித்து பிகிலுவிட்டு ரவுசுகாட்டப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.
Sukran: ஜோதிடத்தில் சுக்கிர பகவான், வரும் செப்டம்பர் 18ஆம் தேதி, துலாம் ராசிக்குள் சஞ்சரிக்கிறார். அதன்பின், அங்கு 28 நாட்கள் அங்கு ஆளுகைச் செலுத்துகிறார். துலாம் ராசியின் அதிபதியும் சுக்கிர பகவான் ஆவார். இதனால், மாளவ்ய ராஜயோகம் ஏற்படுகிறது.
சுக்கிர பகவானின் பெயர்ச்சியால் காதல், அந்நியோன்யம், அன்பு சிலவற்றை சில ராசியினர் பெறுகின்றனர். நிலுவையில் இருக்கும் பணிகளை முடிக்கின்றனர். இக்காலகட்டத்தில் சில ராசியினருக்கு பணியில் மகத்தான வெற்றியும், வணிகர்களுக்குப் பெரும் லாபமும் உண்டாகும்.
சுக்கிரன் துலாம் ராசியில் நுழைவதால், மாளவ்ய யோகம் உருவாகி சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தருகிறது.
மாளவ்ய யோகத்தால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
மேஷம்:
சுக்கிரன் துலாம் ராசியில் நுழைவதால், மேஷ ராசியினருக்கு மாளவ்ய ராஜயோகம் உண்டாகிறது. இதனால் தொழில்முனைவோர், வெவ்வேறு ஒப்பந்தங்களைப் பெறுகின்றனர். பணியிடத்தில் உங்களின் திறன் அங்கீகரிக்கப்பட்டு சம்பள உயர்வு, ஊக்கத்தொகை ஆகியவற்றைப் பெறலாம். புதியவேலை தேடும் நபர்களுக்கு நல்லபணி கிடைக்கும்.
பணியிட அரசியல், எதிரிகளின் பார்வை ஆகியவற்றில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. பூர்வீகச் சொத்துகள் கிட்டும். இல்லற வாழ்வில் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நம்மை வீழ்த்த நினைத்தவர்கள் விலகிச் செல்வார்கள். இக்காலத்தில் வெகுநாட்களாக வாங்க நினைத்ததை வாங்குவீர்கள்.
துலாம்:
சுக்கிரன் துலாம் ராசியில் நுழைவதால் மாளவ்ய ராஜயோகம் உண்டாகிறது. மேலும் துலாம் ராசிக்கு அதிபதி, சுக்கிரன் ஆவார். இதனால் கடன் தொல்லையில் இருக்கும் துலாம் ராசியினருக்கு, அதில் இருந்து விடுபட வாய்ப்புகள் உருவாகும். இதனால் துலாம் ராசியினரின் வருவாய் அதிகரிக்கும். வெகுநாட்களாக பிசினஸ் செய்ய நினைப்பவர்கள் இந்த காலத்தில் பிசினஸ் தொடங்கினால், லாபம் அதிகரிக்கும். வெகுநாட்களாக வரன்பார்த்து, வரன் அமையாதவர்களுக்கு இந்த காலத்தில் கல்யாணம் கைகூடலாம். வெகுநாட்களாக இருந்த குழப்பம், மனசஞ்சலம் மாறும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களின் பதினோராம் வீட்டில் சுக்கிர பகவான் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் சுக்கிர பகவான் நுழைவதால் உண்டாகும் மாளவ்ய யோகாத்தால் பலருக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன.
இந்த காலத்தில் திட்டமிட்டு உழைத்தால் சில்லறை வர்த்தக வியாபாரிகள், மொத்த வியாபாரிகளாக மாறலாம். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவு, கண் திருஷ்டி எல்லாம் குறைந்து குதூகலம் உண்டாகும்.
தொழிலதிபர்கள் அந்தந்த துறைகளில் அடுத்த கட்ட வளர்ச்சியைப் பெறுவார்கள். பணியிடத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்காதவர்களுக்கு, நல்ல அங்கீகாரம் கிடைக்கலாம். மாளவ்ய யோகத்தால் தாம்பத்திய வாழ்க்கையை எதிர்நோக்குபவர்களுக்கு சுபச்செய்தியும், கணவன் - மனைவி இடையே இருந்த கீறல்கள் மறைந்து சமாதானமும் உண்டாகும். நிறைவாக மகிழ்ச்சியையும் மனநிறைவையும் இந்த காலம்தரும்.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்