Aquarius: கும்பத்தில் புலம்பெயரும் சூரியபகவான்.. அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Aquarius: கும்பத்தில் புலம்பெயரும் சூரியபகவான்.. அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்!

Aquarius: கும்பத்தில் புலம்பெயரும் சூரியபகவான்.. அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Feb 12, 2024 04:13 PM IST

கும்ப ராசியில் சூரியபகவான் நாளை பெயர்ச்சியாகிறார்.

<p>கும்பத்தில் புலம்பெயரும் சூரியபகவான்.. அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்!</p>
<p>கும்பத்தில் புலம்பெயரும் சூரியபகவான்.. அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்!</p>

அதன்படி, சூரிய பகவான், நாளை (பிப்ரவரி 13) கும்பராசியில் சஞ்சரிக்கவுள்ளார். இதன் தாக்கத்தால் நான்கு ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். அத்தகைய ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

மேஷம்: இந்த ராசியினருக்கு, சூரிய பெயர்ச்சியால் பணியிடத்திலும் வியாபாரத்திலும் இருந்த சுணக்கம் மறையும். வம்பு, வழக்குகள் தீரும். நினைவாற்றல் அதிகரிக்கும். வெகுநாட்களுக்கு முன் செய்த முதலீட்டின் பலன் தற்போது கிட்டும். கணவன் - மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்: இந்த ராசியினருக்கு, நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. பணியிடத்தில் ஊக்கத்தொகை கிடைக்கும். உங்களது பிள்ளைகளின் படிப்பு மேம்படும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம். குடும்பத்தில் திருமணம், வளைகாப்பு ஆகியவை நடக்கும்.

துலாம்: இந்த ராசியினருக்கு, வெகுநாட்களாக இருந்த காரியத்தடை நீங்கும். படிப்பில் ஆர்வமும் புதிய பணியைக் கைப்பற்றுவதில் ஒரு ஆர்வமும் பிறக்கும். உடல்நலம் மேம்படும். இக்காலத்தில் தந்தை - மகன் இடையே ஒற்றுமை பிறக்கும். பொருளாதார நிரவல் நடக்கும்.

மகரம்: இந்த ராசியினருக்கு, சூரியனின் பெயர்வால் பொருளாதாரம் மேம்படும். பகைவர்களாக இருந்தவர்கள், சிறு சண்டைபோட்டு பேசாமல் இருந்தவர்கள் மீண்டும் பேசுவார்கள். வெளிநாடு செல்ல நினைத்தால் இக்காலத்தில் முயற்சித்தால் நல்ல கம்பெனியில் வேலை கிடைக்கும். மனைவி - கணவன் இடையே மகிழ்ச்சியான பிணைப்பு உருவாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

Whats_app_banner

டாபிக்ஸ்