தமிழ் செய்திகள்  /  Astrology  /  Zodiac Signs Favoured By Lord Venus Who Changes Signs Twice In March

Lord Venus Change: மார்ச் மாதத்தில் 2 முறை இடத்தை மாற்றும் சுக்கிரன்.. விஜயம் பெறும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Feb 29, 2024 02:12 PM IST

மார்ச் மாதத்தில் இரண்டு முறை ராசிகளை மாற்றும் சுக்கிர பகவானால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

சுக்கிர பகவான்
சுக்கிர பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்: இந்த ராசியினருக்கு மார்ச் மாதத்தில் சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மைகள் கிடைக்கும். வருவாய் கூடும். தொழிலில் வளர்ச்சி இருக்கும். வெளிநாட்டு நிறுவனத்தால் ஆதாயம் உண்டு.

ரிஷபம்: இந்த ராசியினருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். புரோமோஷன் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறும். வருவாய் அதிகரிக்கும். உடல்நலம் மேம்படும். அலுவலக அரசியல் நீங்கும்.

மிதுனம்: இந்த ராசியினருக்கு வரும் சுக்கிரப் பெயர்ச்சியால் நல்லதிர்ஷ்டம் உண்டாகும். பதவியில் நற்பெயர் கிட்டும். முன்பே செய்த முதலீடுக்கு தற்போது லாபம் கிட்டும். வெகுநாட்களாக உங்களிடம் பணத்தைப் பெற்று தராமல் இருப்பவர்கள், மனம் திருந்தி வந்து பணத்தைக் கொடுப்பார்கள்.

தனுசு: இந்த ராசியினருக்கு இரண்டு சுக்கிரப் பெயர்ச்சியால், கால் வலி, வயிற்று வலி குணமாகும். தொழிலில் இருந்த சிக்கல்கள் மாறும். போட்டித் தேர்வுகளுக்கு முயற்சித்தால் வெற்றி வாகை சூடலாம்.

கன்னி: இந்த ராசியினருக்கு சுக்கிரனின் இரண்டு சஞ்சாரங்களால், செல்வ வளத்துக்குப் பஞ்சம் இருக்காது. பணி தொடர்பாக வெளிமாநிலம் செல்வீர்கள். அதன்மூலம் ஆதாயம் கிடைக்கும். மந்தமாக இருந்த தொழிலில் லாபம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் பெருகும்.

பொறுப்பு துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்