தமிழ் செய்திகள்  /  Astrology  /  Zodiac Signs Favoured By Lord Venus Transiting In Capricorn

Capricorn: மகர ராசியில் சஞ்சரிக்கப்போகும் சுக்கிரன்.. அதிர்ஷ்டக் காற்றை சுவாசிக்கப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Feb 19, 2024 08:55 PM IST

மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்கிர பகவானால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

சுக்கிரன்
சுக்கிரன்

ட்ரெண்டிங் செய்திகள்

ரிஷபம்: இந்த ராசியினர் சுக்கிரனின் அருளாசியால் வாழ்வில் இன்பத்தைப் பெறுவார்கள். பொறுப்பாக விடியற்காலை எழுந்து தொழிலுக்குச் சென்று, இனிமையாகப் பேசினால் நல்ல லாபம் கிட்டும். இத்தனை நாட்களாக இருந்த மனச்சோர்வு நீங்கும். புதிய ஐடியாக்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் மேன்மையுண்டு. நீங்கள் விரும்பிய வருவாயைப் பெறலாம்.

துலாம்: இந்த ராசியினருக்கு, சுக்கிரப் பெயர்ச்சியால், நீங்கள் தொட்ட வியாபாரம் துலங்கும். குடும்பத்துடன் புதிய ஊர்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். தாய் - தந்தையரின் உடல்நிலை மேம்படும். உறவுகள் இடையே சிக்கல் நீங்கும். உங்கள் குடும்பத்துடன் நீண்டநாட்களாகப் பகை வைத்து பேசாமல் இருப்பவர்கள் தற்போது பேசுவார்கள். 

கும்பம்: இந்த ராசியினருக்கு, சுக்கிரப் பெயர்ச்சியால் மனதில் நம்பிக்கை பிறக்கும். இறை தொண்டு செய்வீர்கள். தேவைக்குப் பணம் கிடைக்கும். இல்லறத்துணையுடன் இருந்த பிரச்னைகள் நீங்கும்.தொழில் சார்ந்த முடிவுகளுக்கு, இல்லறத்துணையின் ஆசி கிடைக்கும். குழந்தைகள் பரீட்சைகளில் வென்று நல்ல பெயரைப் பெற்றுக் காட்டுவார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்