HT Yatra: நிர்வாணமாக உணவு கேட்ட சம்பவம்.. தீர்த்தம் தெளித்த அனுசியா.. அமர்த்தார் சிவபெருமான்-you can know about the history of suchindram arulmigu thanumalayan temple in kanyakumari district - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: நிர்வாணமாக உணவு கேட்ட சம்பவம்.. தீர்த்தம் தெளித்த அனுசியா.. அமர்த்தார் சிவபெருமான்

HT Yatra: நிர்வாணமாக உணவு கேட்ட சம்பவம்.. தீர்த்தம் தெளித்த அனுசியா.. அமர்த்தார் சிவபெருமான்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 08, 2024 06:36 AM IST

HT Yatra: மன்னர்களின் கலைநயத்தையும் மற்றும் பக்தியையும் வெளிப்படுத்தக்கூடிய எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயில்.

நிர்வாணமாக உணவு கேட்ட சம்பவம்.. தீர்த்தம் தெளித்த அனுசியா.. அமர்த்தார் சிவபெருமான்
நிர்வாணமாக உணவு கேட்ட சம்பவம்.. தீர்த்தம் தெளித்த அனுசியா.. அமர்த்தார் சிவபெருமான்

ஆதிகாலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை கோயில்கள் அமைக்கப்பட்டு சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருவதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

மண்ணுக்காக பல மன்னர்கள் மிகப்பெரிய போர்களை செய்து வந்தாலும் அவர்களின் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். தங்களது பக்திகளை வெளிப்படுத்துவதற்காகவே உலகமெங்கும் மிகப்பெரிய கோயில்களை கட்டி சிவபெருமானை மன்னர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக அந்த கோயில்கள் சிவபெருமான் மீது கொண்டுள்ள பக்தியை வெளிப்படுத்தி நின்று வருகின்றன.

மன்னர்களின் கலைநயத்தையும் மற்றும் பக்தியையும் வெளிப்படுத்தக்கூடிய எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயில்.

தல சிறப்பு 

இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் தாணுமாலயன் இன்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகிறார். இந்த கோயிலின் தலை விருட்சமாக கொன்றை மரமும், தீர்த்தமாக பிரபஞ்ச தீர்த்தமும் விளங்கி வருகிறது.

இந்த திருக்கோயிலில் ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில் நின்ற நிலையில் காட்சி கொடுத்த வருகிறார். மேலும் நான்கு இன்னிசை தூண்களும் குறிப்பாக எங்குமே காண முடியாத அளவிற்கு பெண் உருவத்தில் கணேஷினி என்று விநாயக பெருமானும் சிற்பக் கோளத்தில் காட்சி கொடுத்து வருகின்றார்.

குறிப்பாக இந்த கோயிலில் சிவபெருமான் விஷ்ணு பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் குடிகொண்டு காட்சி கொடுத்து வருகின்றனர் திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் நீண்ட ஆயுள் வேண்ட கூடியவர்கள் அனைவருடைய வேண்டுதலும் இங்கு நிறைவேற்றப்படுவதாக பக்தர்கள் நம்பிக்கை கூறுகின்றனர்.

தல வரலாறு

மாமுனிவர் அத்ரியும், கற்புக்கரசி அனுசியாவும் தற்போது கோயில் இருக்கக்கூடிய சுசீந்திரத்தில் தவம் செய்து கொண்டிருந்தனர். ஒருமுறை முனிவர் அத்ரி இமயமலை நோக்கி சென்றுள்ளார். அப்போது அனுசுயாவின் கற்பை சோதிப்பதற்காக அயன், அரி, அரண் ஆகிய மூவரும் பிராமண வேடத்தில் ஆசிரமம் நோக்கி வந்துள்ளனர்.

அப்போது மூவருக்கும் அனுசியா உணவு படைக்க தொடங்கியுள்ளார். பின்னர் மூவரும் ஆடை அணிந்த ஒருவர் உணவு பரிமாறினால் எங்களால் உண்ண முடியாது எனக் கூறியுள்ளனர். இதில் ஆச்சரியம் அடைந்த அனுசியா திடீரென தனது கணவரின் காலை கழுவிய நீரை அந்த மூன்று பேர் மீதும் தெளித்துள்ளார்.

உடனே அந்த மூன்று பேரும் குழந்தைகளாக மாறி உள்ளனர். அதற்குப் பிறகு அவர்களுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளார் அனுசியா. கொஞ்ச நேரம் கழித்து அந்த மூன்று பேரும் தேவியரும் வந்துள்ளனர். அதன் பின்னர் அனுசியா அவர்கள் மூன்று பேருக்கும் சுய உருவை கொடுத்தார்.

அதன் பின்னர் மகரிஷி அத்ரியும் வந்தார். அனுசியா மற்றும் அத்ரி முனிவர் இருவருக்கும் மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்து அருள் ஆசியை வழங்கினர். இந்த நிகழ்வை முன்னிறுத்தி இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது அதன் காரணமாகவே மும்மூர்த்திகளும் இந்த கோயிலில் காட்சி கொடுத்த வருகின்றனர்..

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

தொடர்புடையை செய்திகள்