தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: பீமன் வழிபட்ட மணல் லிங்கம்.. காமத்தால் சாபம் பெற்ற சந்திரன்.. முருகனுக்கு தோஷம் நீக்கிய வில்வவனேஸ்வரர்

HT Yatra: பீமன் வழிபட்ட மணல் லிங்கம்.. காமத்தால் சாபம் பெற்ற சந்திரன்.. முருகனுக்கு தோஷம் நீக்கிய வில்வவனேஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 27, 2024 06:30 AM IST

Vilvavaneswarar temple: ஒவ்வொரு கோயிலும் தனி சிறப்பைக் கொண்டு விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் அருள்மிகு வில்வவனேஸ்வரர் திருக்கோயில்.

வில்வவனேஸ்வரர் திருக்கோயில்
வில்வவனேஸ்வரர் திருக்கோயில்

பல நூற்றாண்டுகளை கடந்து எத்தனையோ சிவன் கோயில்கள் இன்று வரை அசைக்க முடியாத நிலைமையில் இருந்து வருகிறது. ஒவ்வொரு கோயிலும் தனி சிறப்பைக் கொண்டு விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

 

பஞ்ச பாண்டவர்களில் மிகவும் பலசாலியாக கருதப்படக் கூடியவர் பீமன் இவர் மணலிங்கம் செய்து வழிபட்டு வந்தார். அந்த லிங்கம் இந்த திருக்கோயிலில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திருக்கோயிலில் தர்மர் பீமன் நகுலன் சகாதேவன் உள்ளிட்டோர் வழிபட்ட சிவலிங்கங்கள் அனைத்தும் அவர்களின் பெயர்களிலேயே இங்கு இருந்து வருகிறது. இதில் பீமனின் மணல் லிங்கம் தனி சிறப்போடு விளங்கி வருகிறது.

அறுபடை வீடு கொண்டு அக்னிபுத்திரனாக விளங்கி வரும் முருகப்பெருமான் தனது தோஷம் நீங்குவதற்காக இந்த திருக்கோயிலில் சிவபெருமானை போதித்தார் என்பது ஐதீகமாக உள்ளது. அதன்படி இந்த திருக்கோயிலில் திருமண கோலத்தோடு முருகப்பெருமான் சிவலிங்கத்தை வணங்கும்படி சன்னதி அமைக்கப்பட்டிருக்கும். அது இந்த திருக்கோயிலில் மேலும் சிறப்பாகும்.

தல வரலாறு

 

அசுரனை வதம் செய்த பிறகு முருகப்பெருமான் வீரகத்தி தோஷம் பெற்றார். இந்த தோஷத்தை நீக்குவதற்காக சிவபெருமானிடம் வழி கேட்டார் முருக பெருமான். பூலோகத்திற்கு சென்று வில்வாரண்யம் சென்று அங்கு என்னை பூஜித்தால் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என சிவபெருமான் கூறினார்.

அதேபோல முருகப்பெருமான் இங்கு வந்து மயூரா நதியில் நீராடி விட்டு வில்வங்களால் பூஜைகள் செய்து சிவபெருமானை வழிபட்டார். அதற்குப் பிறகு சிவபெருமான் காட்சி கொடுத்து முருக பெருமானின் தோஷத்தை நீக்கினார்.

அதற்குப் பிறகு என்னை வடக்கு நோக்கி பூஜித்த கோளத்தில் நீ பக்தர்களுக்கு காட்சி கொடுக்க வேண்டுமென முருக பெருமானிடம் சிவபெருமான் கூறிவிட்டு மறைந்தார். இந்த திருக்கோயிலில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணியர் வடக்கு நோக்கி அருள் பாலித்து வருகிறார்.

சந்திரன் சாபம்

 

சந்திர பகவானுக்கு 27 மனைவிகள். இத்தனை மனைவிகள் இருந்தும் சந்திரன் காம வெறி கொண்டு திரிந்தார். தேவர்களின் குருவாக விளங்கக்கூடிய குரு பகவானின் மனைவி மீது விருப்பம் கொண்டு தவறான செயலில் ஈடுபட்டார் அதனால் அவருக்கு ரோக நோய் மற்றும் கொடிய பாவத்திற்கான சாபம் கிடைத்தன.

அதற்குப் பிறகு சாபம் விமோசனம் கிடைக்க நல்லூரில் இருக்கக்கூடிய வில்வவனேஸ்வரரை வழிபட்டால் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என பிரம்ம தேவர் சந்திரனிடம் கூறியுள்ளார். பிரம்ம தேவர் கட்டளையிட்டபடி இந்த திருத்தளத்திற்கு வந்து நதியில் குளித்துவிட்டு கார்த்திகை மற்றும் பௌர்ணமி திருநாளில் பசுமாட்டின் நெய்யால் லட்சம் விளக்குகள் ஏற்றி சிவபெருமானை மனம் உருகி கண்ணீரோடு வழிபட்டு சாப விமோசனத்தை சந்திர பகவான் பெற்றார்.

சந்திர பகவான் சாப விமோசனம் பெறுவதற்காக கண்ணீரோடு வழிபட்டு பூஜை செய்த லிங்கம் ஸ்ரீ சோம லிங்கேஸ்வரர் என்ற பெயரில் இந்த திருக்கோயிலில் இன்று வருகிறது.

அமைவிடம்

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் என்ற ஊரில் அருள்மிகு வில்வவனேஸ்வரர் திருக்கோயில் இருக்கின்றது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel