தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: பதஞ்சலியாக அவதாரம் எடுத்த ஆதிசேஷன்.. நடராஜராக காட்சியளித்த சிவன்.. ஆனந்தத்தில் எடை கூடிய மகாவிஷ்ணு

HT Yatra: பதஞ்சலியாக அவதாரம் எடுத்த ஆதிசேஷன்.. நடராஜராக காட்சியளித்த சிவன்.. ஆனந்தத்தில் எடை கூடிய மகாவிஷ்ணு

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 28, 2024 06:30 AM IST

எத்தனையோ கோயில்கள் தமிழ்நாட்டில் வரலாறுகளை தாங்கிக் கொண்டு சிறப்பு மிகுந்த கோயிலாக இன்றும் காட்சி அளித்த வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் சிதம்பரம் அனந்தீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் அமைந்துள்ளது.

அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோயில்

குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகம். மனித உயிரினம் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை சிவபெருமானை வழிபட்டதற்கான தடங்கள் அனைத்தும் காணப்படுகின்றன. இந்தியாவில் பல பிரிவுகளாக ஆண்டு வந்த மன்னர்களின் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.

அந்த வகையில் இந்தியாவின் தெற்கு பகுதியை ஆண்டு வந்த ராஜராஜ சோழன் மிகப்பெரிய மன்னராக இருந்தாலும் அவர் ஒரு சிவபக்தர். அதனை பறைசாற்றும் விதமாக தஞ்சாவூரில் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலை நிறுவியுள்ளார். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அசைக்க முடியாத சரித்திர குறியீடாக அந்த கோயில் விளங்கி வருகிறது.

இதுபோல எத்தனையோ கோயில்கள் தமிழ்நாட்டில் வரலாறுகளை தாங்கிக் கொண்டு சிறப்பு மிகுந்த கோயிலாக இன்றும் காட்சி அளித்த வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் சிதம்பரம் அனந்தீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் அமைந்துள்ளது.

தல சிறப்பு

 

இந்த திருக்கோயிலில் பதஞ்சலி மகரிஷிக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு வழிபாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. விஷ்ணு பகவான் ராம அவதாரம் எடுத்த பொழுது லக்ஷ்மணனாக பதஞ்சலி அவதாரம் எடுத்தார். அந்த பதஞ்சலியின் நட்சத்திரம் பூசம் ஆகும். அதன் காரணமாக பூச நட்சத்திர திருநாளில் இந்த விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது.

மார்கழி மாதத்தில் திருவாதிரை திருநாளன்று நடராஜரோடு சேர்ந்து பதஞ்சலி மகரிஷியும் புறப்படுவார். பதஞ்சலி முனிவர் யோகா சூத்திரத்தை எழுதியுள்ளார். அதன் காரணமாக இந்த கோயிலில் சில தூண்களில் யோகாசன முறைகள் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன.

நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த திருக்கோயிலில் வழிபட்டால் நாக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என விரும்பும் மாணவர்கள் பதஞ்சலி மகரிஷியை இங்கே வந்து வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

தல வரலாறு

 

மகாவிஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பார். ஆதிசேஷன் அவரைத் தாங்கி மெத்தையாக காத்து நிற்பார். ஒருமுறை மகாவிஷ்ணு வழக்கத்தை விட எடை அதிகமாக இருந்துள்ளார். இதுகுறித்து ஆதிசேஷன் அவரிடம் காரணம் கேட்டுள்ளார். உடனே சிவபெருமானின் நாட்டியத்தை நான் மனதில் நினைத்துக் கொண்ட காரணத்தினால் அந்த ஆனந்தத்தில் எனது எடை கூடிவிட்டது என கூறியுள்ளார்.

உடனே ஆவலோடு ஆதிசேஷன் தனக்கும் அந்த தரிசனத்தை கிடைக்க அருளும்படி வேண்டிக்கொண்டார். பூலோகத்தில் இருக்கக்கூடிய சிதம்பரம் சென்று அங்கே சிவபெருமானை வழிபட்டால் உனக்கு அந்த தரிசனம் கிடைக்கும் என மகாவிஷ்ணு ஆதிசேஷன் இடம் கூறியுள்ளார்.

மகா விஷ்ணு வாக்குப்படி அத்திரி மகரிஷிக்கு மகனாக ஆதிசேஷன் பிறந்தார். பதஞ்சலி என்ற பெயரை அவர் பெற்றார். தில்லைவனம் என்று அழைக்கப்பட்ட அந்த பகுதியில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அதன் கரையில் சிவலிங்கத்தை வைத்து பதஞ்சலி சிறப்பு பூஜைகளை செய்து வந்தார். அவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு அனந்தீஸ்வரர் என பெயர் கிடைத்தது. வழிபாட்டால் மகிழ்ந்த சிவபெருமான் நடராஜர் கோளத்தில் அவர் முன் தரிசனம் கொடுத்து காட்சியளித்தார்.

அமைவிடம்

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் உள்ளன.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel