HT Yatra: புத்திர பீடையில் சிக்கித் தவித்த கரிகால் சோழன்.. கனவில் ஏற்பட்ட மாற்றம்.. தோஷத்தை நீக்கிய சங்கமேஸ்வரர்!
சிறப்பு மிகுந்த சிவபெருமான் கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில்.
மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். குறிப்பாக தமிழ்நாட்டில் இவருக்கு எண்ணில் அடங்காத கோயில்கள் அமைந்துள்ளன. மன்னர்கள் காலத்திலிருந்து இன்றுவரை சிவபெருமானுக்கு வழிபாட்டுத்தளங்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவின் தெற்கு பகுதிகளில் சிவபெருமான் குலதெய்வமாக இருந்து வருகிறார்.
எத்தனையோ சிறப்பு மிகுந்த சிவபெருமான் கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
பொதுவாக ஆறுமுகம் கொண்ட முருக பெருமானின் சிலையானது உண்ணும் பின்னுமாக அனைத்து திசைகளையும் நோக்கி பார்க்கும் வண்ணம் அமைந்திருக்கும் ஆனால் இந்த திருத்தரத்தில் உள்ள ஆறுமுகங்கள் கொண்ட முருக பெருமானின் முகம்மது ஒரே திசையை நோக்கி பார்க்கும் வண்ணம் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவலிங்கத்தின் மேல் பகுதியில் பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது. இந்த பிரம்ம சூத்திரமானது விதியை மாற்றக்கூடிய வல்லமை கொண்டதாக கூறப்படுகிறது. இது சோழர்களால் கட்டப்பட்ட கோயில் ஆகும்.
மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்க கூடிய இளம் தலைமுறைகளின் தலைவிதியையே மாற்றக்கூடிய மிக சக்தி இந்த கோயிலுக்கு உண்டு என பக்தர்கள் கூறுகின்றனர். அனைத்து விதமான சிக்கல்களுக்கும் நிவர்த்தி கொடுக்கும் தலமாக இது விளங்கி வருகின்றது.
தல பெருமை
அசுரன் ஒருவன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். யாராலும் தன்னை அழிக்க முடியாத சாகாவரத்தை சிவபெருமானிடம் இருந்து பெற்றான். தேவலோகத்தை ஆள வேண்டும் என்ற ஆசை அந்த அசுரனுக்கு ஏற்பட்டது அதனால் முனிவர்கள் மற்றும் தேவர்களுக்கு தொடர்ந்து துன்பம் கொடுத்து வந்துள்ளான்.
உடனே தேவர்கள் அனைவரும் சேர்ந்து சிவபெருமானை நோக்கி சென்று வேண்டிக் கொண்டனர். பின்னர் தேவர்கள் மற்றும் ரிஷிகள் அனைவரும் சேர்ந்து சங்கு புஷ்பங்கள் நிறைந்த தோட்டமாக இருந்த இடத்தை சுத்தம் செய்து அங்கு சிவபெருமானை பூஜை செய்து வந்துள்ளனர். அதன்பின்னர் சிவபெருமான் அந்த அசுரனை வதம் செய்தார். புராண கதைகளில் கூறப்படுகின்றது.
தல வரலாறு
சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள் மூவேந்தர்களுமே பரம சிவ பக்தர்களாக இருந்து வந்துள்ளனர். குறிப்பாக சோழர்கள் மிகப்பெரிய பக்தர்களாக இருந்து வந்து. அதில் அதிதீவிர சிவ பக்தனாக விளங்கியவர் கரிகால் சோழ மன்னன். இவர் தனக்குப் பின்பு நாட்டை ஆள்வதற்கு புத்திரன் இல்லை என தவிர்த்து வந்துள்ளார்.
அதன் பின்னர் அவருக்கு புத்திர பீடை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க வேண்டி சிவனிடம் மனம் உருகி வழிபாடு செய்துள்ளார். ஒருமுறை இவரது கனவில் சிவபெருமான் அற்புதங்கள் பல செய்த தளங்களில் இவர் ஆலயம் கட்டுவது போல கனவு வந்துள்ளது. இது குறித்து கரிகால் சோழன் தனது ஆன்றோர் மற்றும் சான்றோர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
அவர்களது ஆலோசனையின் படி அற்புதங்கள் நிறைந்த இந்த இடத்தில் கோயிலில் எழுப்பி கரிகால் சோழன் வழிபாடு செய்து வந்துள்ளார். கரிகால் சோழன் கட்டிய 36 சிவபெருமான் தலங்களில் இது 31வது தலமாக விளங்கி வருகிறது.
அமைவிடம்
இந்த சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல வாகன வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9