Marriage Luck: எந்தெந்த ராசிகளுக்கு இந்தாண்டு திருமணம் கைகூடும்?
காதலர் தினத்துக்குப் பின் திருமணம் கைகூடப்போகும் ராசிகள் குறித்துக் காணலாம்.
இன்னும் திருமணம் ஆகாமல் எத்தனையோ 90’ஸ் கிட்ஸ்கள் திருமணம் ஆகாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சிலருக்கு, திருமணம் மேடை வரை போய், நின்று போயிருக்கலாம். இந்நிலையில் காதலர் தினத்துக்குப் பின், சில ராசியினருக்கு திருமணத்தடைகள் நீங்கும். அப்படி எந்தெந்த ராசிகள் திருமணப் பந்தத்தில் இணையப்போகின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.
மிதுனம்: இந்த ராசியினருக்கு, பிப்ரவரி மாதத்துக்குப் பின், கல்யாணயோகம் உண்டாகவுள்ளது. இக்கால கட்டத்தில் குருபகவானின் அனுகிரகத்தால் பிடித்த நபரை சந்தோஷத்துடன் மனம் முடிப்பர். காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பெற்றோரின் ஆசியோடு, திருமணம் நடக்கும்.
சிம்மம்: இந்த ராசியினருக்கு, இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் திருமணவாய்ப்புகள் பற்றிய பேச்சு அடிபட்டு நல்ல வாழ்வு வாய்க்கும். உங்களுக்கு ஏற்ற, உங்கள் குணநலத்துடன் ஒத்த நபருடன் திருமணம் நடக்கவாய்ப்புள்ளது.
துலாம்: இந்த ராசியினருக்கு, இந்தாண்டின் ஏழாம் வீட்டில் இருந்து வியாழத் திசையைத் தருகிறார். ஆண்டின் முதல் பாதி கல்யாணப் பேச்சுகள், வரன் பார்க்கும் வைபவங்கள், பொருத்தமான ஜாதகங்கள் வந்துசேரும். இக்காலகட்டத்தில் வாழ்வின் முன்னேற்றமும் நல்ல முறையில் இருக்கும்.
விருச்சிகம்: இந்த ராசியினருக்கு, ஜூலை மாதம் முதல் திருமண வாய்ப்புகள் வந்துசேரும். 2024ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி குரு பகவான், ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால், வாழ்வில் திருமணயோகம் வரும்.
மகரம்: 2024ஆம் ஆண்டு மகர ராசியினருக்கு, ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் கல்யாணம் நடக்கவாய்ப்புள்ளது. அதேபோல், சிங்கிளாக இருப்பவர்கள், மார்ச் முதல் ஏப்ரல் வரையிலும், மே முதல் ஜூன் வரையிலான காலகட்டத்திலும் காதல் கைகூட வாய்ப்புள்ளது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்