Vinayakar Chathurthi 2024: விநாயகர் சதுர்த்தி தொடங்கும் நாள்.. பூஜைக்கான நேரம், விதிமுறைகள் - முழு விவரம் இதோ
Vinayakar Chathurthi 2024: இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி தொடங்கும், பூஜைக்கான நேரம், விதிமுறைகள் என முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள். 10 நாள்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
Ganesh Chaturthi 2024: பஞ்சாங்கத்தின்படி, விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டில் செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 17 அன்று அனந்த் சதுர்தசி நாளில் விநாயகர் சிலையை மூழ்கடிப்பதில் முடிவடைகிறது.
விநாயகப் பெருமானின் பிறந்தநாள் விநாயக சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதத்தில் சுக்ல பக்ஷ சதுர்த்தி தேதியிலிருந்து 10 நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
இந்த நாள்களில் முழு முதற் கடவுளான விநாயகர் சடங்குகளுடன் வழிபடுகிறார். ஜோதிடத்தில், விநாயகர் ஞானத்தையும், மகிழ்ச்சியையும் செழிப்பையும் அளிப்பவராகக் கருதப்படுகிறார். ஜோதிட சாஸ்திரப்படி, விநாயகர் நண்பகலில் பிறந்தார். எனவே, விநாயகரை வழிபடுவதற்கு மதிய நேரம் சிறந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கும் சதுர்த்தியானது 10 நாள்களுக்குப் பிறகு, விநாயகர் சிலை செப்டம்பர் 17ஆம் தேதி நீர்நிலைகளில் கரைக்கப்படுவதுடன் முடிவடைகிறது. விநாயக சதுர்த்தியின் சரியான தேதி, மங்கள நேரம், வழிபாடு முறை மற்றும் சந்திரன் உதிக்கும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்வோம்.
விநாயக சதுர்த்தி எப்போது தொடங்குகிறது?
பஞ்சாங்கத்தின் படி, ஆவணி மாதம் சுக்ல பக்ஷத்தின் சதுர்த்தி திதி செப்டம்பர் 6 அன்று பிற்பகல் 03:01 மணிக்கு தொடங்கி மறுநாள் செப்டம்பர் 7 அன்று மாலை 05:37 மணிக்கு முடிவடைகிறது. எனவே, உதயதிதியை மனதில் வைத்து, விநாயகர் சதுர்த்தியானது செப்டம்பர் 7 முதல் தொடங்கும்.
மதிய விநாயக பூஜை முகூர்த்தம்: இந்த நாளில் மதிய விநாயக பூஜையின் நல்ல நேரமாக காலை 11:03 முதல் மதியம் 01:34 வரை இருக்கிறது.
தடைசெய்யப்பட்ட சந்திர தரிசன நேரம்: செப்டம்பர் 7 அன்று காலை 09:30 மணி முதல் இரவு 08:45 மணி வரை சந்திர தரிசனம் தடைசெய்யப்படும். விநாயக சதுர்த்தி நாளில் சந்திர தரிசனம் தடை செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த நாளில் சந்திர தரிசனம் தவறான குற்றச்சாட்டு அல்லது களங்கத்துக்கு வழிவகுக்கிறது என்று நம்பப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி வழிபாடு முறை
விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்திருங்கள். குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை அணியுங்கள்.
வீட்டின் பூஜை அறையை நன்கு சுத்தம் செய்யுங்கள்.
பூஜை அறையில் இருக்கும் மேஜையில் சிவப்பு துணியை விரித்து மங்கள நேரத்தில், கிழக்கு அல்லது வடக்கு திசையில் விநாயகர் சிலையை நிறுவவும்.
விநாயகர் சிலையுடன் ரித்தி-சித்தியை நிறுவவும். இப்போது விநாயகருக்கு மஞ்சள், துருவம், வாசனை திரவியம், மோதகம், சந்தனம், அக்ஷதம் உள்ளிட்ட அனைத்து பூஜைப் பொருட்களையும் சமர்பிக்கவும்.
விநாயகருக்கு தூப, தீபம் காட்டி, விநாயகருடன் சேர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் ஆரத்தி செய்யவும். அதேபோல் சுண்டல் சமைத்து படையலிட்டு அதை பிரசாதாமாக வழங்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்