Sani Bagavan: தீராத பிரச்னைகளா?.. சனி பகவானின் நன்மைகளை பெற என்ன செய்ய வேண்டும்? - ஆன்மீக தகவல்கள் இதோ..!-what should be done to get the benefits of lord shani - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Bagavan: தீராத பிரச்னைகளா?.. சனி பகவானின் நன்மைகளை பெற என்ன செய்ய வேண்டும்? - ஆன்மீக தகவல்கள் இதோ..!

Sani Bagavan: தீராத பிரச்னைகளா?.. சனி பகவானின் நன்மைகளை பெற என்ன செய்ய வேண்டும்? - ஆன்மீக தகவல்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Sep 28, 2024 01:03 PM IST

Sani Bagavan: நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனி பகவான் ஆவார். அவரின் நன்மைகளை பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

Sani Bagavan: நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனி பகவான் ஆவார். அவரின் நன்மைகளை பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
Sani Bagavan: நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனி பகவான் ஆவார். அவரின் நன்மைகளை பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

ஜோதிடத்தை பொறுத்தவரை ஒருவரது செயல்பாடுகளை சீர்த்துக்கி பார்த்து அதற்கு ஏற்ற பலன்களை தரக்கூடிய நீதிமானாக சனி பகவான் விளங்குகிறார். நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே அவரது பலன்கள் இருக்கும். சனி பகவானின் தாக்கம், நம்மை கடினமாக உழைக்கவும், பொறுமையாக இருக்கவும் கற்றுத்தருகிறது. பல விதமான தொழில்களுக்கு காரக கிரகமான சனி பகவான் நீதி தவறாத பண்பு உடையவர் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை வாசம் செய்யும் சனி பகவான் அந்த ராசிக்காரருக்கு மிகப்பெரிய வாழ்கை அனுபவத்தை வழங்க கூடிய கிரகமாக உள்ளார். இந்த சூழலில் சனி பகவானின் நன்மைகளை பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

2025 இல் சனியின் தாக்கம் என்ன?

அடுத்து வர உள்ள 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று, சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதன் மூலம் மகரம் ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த ஏழரை சனி பாதிப்புகள் முழுமையாக நிறைவடைகின்றது. கும்பம் ராசிக்கு பாத சனியும், மீனம் ராசிக்கு ஜென்மசனியும், மேஷம் ராசிக்கு விரைய சனியும் தொடங்க உள்ளது.

சனி பகவானின் நன்மை பெற என்ன ய்ய வேண்டும்?

  • வன்னிமரம் அல்லது வன்னிமரத்தடி விநாயகரை சனிக்கிழமை அன்று சுற்ற வேண்டும்.
  • சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு எட்டு தேங்காய் உடைத்த பின் தீபம் ஏற்ற வேண்டும்.
  • சனியின் பார்வையில் இருந்து தப்பித்தவர்கள் விநாயகர், ஆஞ்சநேயர், இவர்கள் இருவரும் இணைந்த கோலமான ஆத்யந்த பிரபுவை வழபட வேண்டும்.
  • விஷ்ணு சஹஸ்ரநாமம் அனுமன் சாலீஸா படித்தல் வேண்டும்.
  • சனிப்பிரதோஷ நாளில் சிவனுக்கு வில்வத்தால் பூஜை செய்ய நன்மை கிடைக்கும்.
  • நளபுராணம், திருநள்ளாற்று பதிகம் படித்தல் வேண்டும்.
  • சனிக்கிழமைகளில் விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணய் தீபம், எள்தீபம் ஏற்றுதல் வேண்டும்.
  • சனீஸ்வரருக்கு எள்சாதம் நைவேத்யம் செய்து காகத்திற்கு படைத்தல் வேண்டும்.
  • நல்லெண்ணெய், உளுந்து, இரும்புச்சட்டிகளை தானம் செய்ய வேண்டும்.
  • பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்ய வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்