தமிழ் செய்திகள்  /  Astrology  /  We Will See The Zodiac Signs That Will Get Good Progress In Business Due To Saturn Transit

சனியின் பூரட்டாதி இடமாற்றம்.. திருமண யோகம்.. தொழில் லாபம்.. குழந்தை பாக்கியம்.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 28, 2024 10:05 AM IST

Saturn transit: சனிபகவான் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார். சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

நட்சத்திர பெயர்ச்சி
நட்சத்திர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சனிபகவான் 2 அரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். தற்போது சனி பகவான் கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார் இது இவருடைய சொந்த ராசியாகும். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் இந்த 2024 சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனிபகவான் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார். சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வசதிகள் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பற்றி தரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை அதிகப்படுத்திக் கொடுக்கப் போகின்றது. எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நினைத்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.

மிதுன ராசி

 

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சனி பகவானின் அருளால் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் உங்களுக்கு உண்டாகும்.

 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel