Water Fountain for Home Vastu: தொடர்ந்து வீடு; வேலையில் பிரச்சனை உள்ளதா? இந்த வாஸ்து பரிகாரத்தை டிரை பண்ணுங்க!
Home Vastu: குடும்ப உறுப்பினர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது தொழில், வேலை அல்லது வியாபாரத்தில் பிரச்சனைகளை எதிர்கொண்டாலோ, வீட்டில் நீரூற்று அமைப்பது வாஸ்து பரிகாரம் ஆகும். ஆனால் அதை சரியான இடத்தில் வைத்திருப்பது நல்ல பலனைத் தரும் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு நபரும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஆனந்தத்துடன் வாழ விரும்புகிறார்கள். பணம் மகிழ்ச்சியைத் தரும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எப்போதும் ஏதோ ஒரு குறை இருக்கும். மேலும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் கீழே உள்ளவர்களுக்கும் அவர் அவர் நிலைகளுக்கு ஏற்ப சில கஷ்டங்கள் இருக்கின்றன. இதிலிருந்து ஒரு மனிதன் பணத்தால் ஆடம்பரமாக வாழ முடியும்.
ஆனால் மகிழ்ச்சியை வாங்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. உறவு முறிவுகள் மற்றும் வாழ்க்கையில் அமைதியின்மை ஆகியவற்றை பணம் தீர்க்காது.
எனினும் சில சமயங்களில் வீட்டில் வாஸ்து இல்லாததுதான் இத்தனை சிரமங்களுக்கும் காரணம் என்று பலரும் பலமாக நம்புகிறார்கள். நாம் வீட்டில் நம்மை அறியாமல் செய்யும் சிறு தவறுகள் கூட வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனால் நம் வாழ்வில் எதிர்பாராத விதமாக பல சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இந்த பட்டியலில் நீங்களும் இருந்தால், இதோ சில வாஸ்து பரிகாரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பரிகாரங்களை ஒரே ஒருமுறை செய்து பாருங்கள்.
பல விதமான அலங்கார பொருட்களை வீட்டில் கொண்டு வருகிறோம். இதில் செயற்கை நீரூற்றும் உள்ளது. செயற்கை நீருற்றை பொறுத்தவரை வீட்டை கவர்ச்சிகரமானதாகவும் அழகானதாகவும் மாற்றுகிறது. ஆனால் வீட்டிற்கு குறிப்பிட்ட திசையில் நீரூற்றை வைக்காவிட்டால் பண இழப்பும், வாழ்க்கையில் அமைதியின்மையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீட்டில் நீர் ஊற்று எந்த திசையில் வைக்க வேண்டும்?
குடும்ப உறுப்பினர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது தொழில், வேலை அல்லது வியாபாரத்தில் பிரச்சனைகளை எதிர்கொண்டாலோ, வீட்டில் நீரூற்று அமைப்பது வாஸ்து பரிகாரம் ஆகும். ஆனால் அதை சரியான இடத்தில் வைத்திருப்பது நல்ல பலனைத் தரும் என்று கூறப்படுகிறது.
வீட்டின் நடைபாதையில் அல்லது பால்கனியில் தண்ணீர் ஊற்று வைப்பது நல்ல பலனைத் தரும். இது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் செல்வமும் பெருகும். தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
வீட்டில் தோட்டம் இருந்தால், அங்கேயும் நீரூற்று அமைப்பது நல்லது. ஆனால் தண்ணீர் ஓட்டம் எப்போதும் வீட்டை நோக்கி இருக்க வேண்டும். வீட்டிற்கு வெளியே உள்ள திசையில் தண்ணீர் பாய்ந்தால், பணம் மற்றும் செல்வத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. வீட்டில் ஒரு நீரூற்று வீட்டின் வடக்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைக்கப்பட வேண்டும். இந்த திசையில் நீரூற்று வைப்பது தொழிலில் முன்னேற்றத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தருவதாக கூறப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் எந்த ஒரு செயலிலும் வெற்றி பெறவில்லை அல்லது வேலைப்பளு அதிகரித்துக் கொண்டிருந்தால் அல்லது பணிகளில் தோல்வியடைந்தால், வீட்டில் செயற்கை நீரூற்று அமைப்பது ஒரு சிறந்த தீர்வாகும். எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி. வடகிழக்கு திசையில் ஒரு மண் பானை அல்லது ஜாடியில் நீர் ஊற்று வைக்கலாம். இவ்வாறு செய்வதால் வீட்டில் உள்ள தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அனைத்து வேலைகளிலும் வெற்றி உண்டு என்று வாஸ்து சாஸ்திரமும் கூறுகிறது.
டாபிக்ஸ்