Problem Solving Tree : தீராத பிரச்சனைகளை தீர்த்து.. வாழ்வில் ஐஸ்வர்யத்தை பெற இந்த மரத்தை வழிபடுங்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Problem Solving Tree : தீராத பிரச்சனைகளை தீர்த்து.. வாழ்வில் ஐஸ்வர்யத்தை பெற இந்த மரத்தை வழிபடுங்கள்!

Problem Solving Tree : தீராத பிரச்சனைகளை தீர்த்து.. வாழ்வில் ஐஸ்வர்யத்தை பெற இந்த மரத்தை வழிபடுங்கள்!

Divya Sekar HT Tamil
Jan 22, 2024 03:11 PM IST

Problem solving tree : நமக்கு இருக்கக்கூடிய தீராத பிரச்சனைகளையும் தீர்த்து சகல விதமான பாவங்களும் நீங்கி வாழ்வில் ஐஸ்வர்யத்தை பெற இந்த மரம் பெரிதும் உதவுமாம் அது என்ன மரம் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

நீங்கி வாழ்வில் ஐஸ்வர்யத்தை பெற இந்த மரம் பெரிதும் உதவுமாம்
நீங்கி வாழ்வில் ஐஸ்வர்யத்தை பெற இந்த மரம் பெரிதும் உதவுமாம்

கார்த்திகை மாதம் மட்டுமல்லாமல் அனைத்து மாதங்களிலும் இந்த வில்வம் மரத்தை வணங்கினால் ஏழேழு ஜென்மங்களில் நாம் செய்த பாவங்கள் கழியுமாம். அதனால் அனைத்து மாதங்களிலும் இந்த வில்வ மரத்தை வணங்கினால் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீருமாம்.

கார்த்திகை மாதம் இந்த வில்வ மரத்தின் வழங்கினால் நீண்ட கால பிரச்சனைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. பல ஆண்டுகளாக படுக்கையில் இருக்கும் முதியவர்கள் இந்த வில்வ மரத்தை தரிசித்தால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.

வில்வ மரத்தை 11 முறை சுற்றி வருவது மிகவும் அவசியமான ஒன்று. வில்வ இலை சிவன், பார்வதி, விஷ்ணு ஆகிய மூவரை குறிக்கும். வீட்டில் வில்வம் மரம் அல்லது இலைகளைப் பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும். வில்வ இலையை மரத்திலிருந்து பறித்து அதனை சுத்தம் செய்து சிவனுக்கு பூஜை செய்தால் மிகவும் சிறப்பு.

அதேபோல வாரத்தின் சில நாட்களில் இந்த வில்வம் இலைகளை நாம் பறிப்பதை தவிர்க்க வேண்டும். அதாவது திங்கட்கிழமை, பௌர்ணமி, அம்மாவாசை, அஷ்டமி, நவமி திதிகளில் இந்த இலைகளை நாம் பறிக்கக் கூடாது.

வில்வ மரத்தைக் கொண்டு நாம் செய்யும் பரிகாரம் மூலம் நமது வாழ்க்கையே மாறும் அளவிற்கு பல நன்மைகள் ஏற்படும். அந்த அளவிற்கு வில்வ மரத்தில் ஆன்மீக சக்திகள் உள்ளன.

ஜாதக தோஷத்தை நீக்குவது முதல் செல்வ செழிப்போடு கூடிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வது வரை இந்த வில்வ பரிகாரத்தால் நம்மால் பெற முடியும். வில்வ மரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, யான சக்தி என மூன்று சக்திகள் இருக்கின்றன.

இந்த வில்வ மரத்தில் லட்சுமி தேவி, பார்வதி தேவி, சரஸ்வதி தேவி குடி இருக்கின்றன, செல்வங்களும் பெறலாம், 12 வகையான வில்வ மரங்கள் இருக்கின்றன, அதில் மிக முக்கியமான மரமாக மகா வில்வம், காசி வில்வம், ஏக வில்வம், பஞ்ச வில்வம் கருதப்படுகிறது.

வில்வ இலையைக் கொண்டு சிவபெருமானை வணங்குவது மூலம் நமது சகல பாவங்களும் நீங்கும் என்று கூறுவார்கள். கோயிலில் இருக்கும் வில்வ மரத்துக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதன் மேல் அகல் விளக்கை ஏற்றி அதில் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம்.அப்படி வழிபட்டால் சிறப்பு. அப்படி வழிபடும்போது அந்த மரத்தை 11 முறை சுற்றிவர வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு அனைத்து பலன்ளும் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது.

உடல் உபாதை இருப்பவர்கள் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து வந்து இந்த வில்வ மரத்திற்கு அடியில் வைத்து அகல் விளக்கேற்றி மரத்தை 11 முறை சுற்றி வந்தால் பிரச்சனை தீரும் என சொல்லப்படுகிறது.

நன்றி : AisHutte

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner