Venus - Mars conjunction in Aquarius: கும்பத்தில் நடக்கும் சுக்கிரன் - செவ்வாய் சேர்க்கை: பணமழையில் நனையப்போகும் ராசிகள்
Venus - Mars conjunction in Aquarius: கும்ப ராசியில் சுக்கிர பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இணைவதால் அதிர்ஷ்டமழையில் நனையப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.
Venus - Mars conjunction in Aquarius: கும்ப ராசியில் மார்ச் 7ஆம் தேதி சுக்கிரன் சேர்ந்தநிலையில், சுறுசுறுப்பைத் தரக்கூடிய செவ்வாய் பகவான் வரும் மார்ச் 15ஆம் தேதியில் சேர இருக்கிறார். இதனால் சிலருக்கு செல்வச்செழிப்பு உண்டாகிறது.
கும்பத்தில் சனிபகவான் ஆளுகை செலுத்தி வரும் நிலையில், சுக்கிரனும் சமீபத்தில் சேர்ந்துள்ளார். பொதுவாக சுக்கிரன் நன்மைகளை செய்யக்கூடியவர். இல்லறவாழ்வினை இனிமையாக்கக் கூடியவர். மேலும் வரும் மார்ச் 15ஆம் தேதி, கும்பராசியில் செவ்வாய் பகவான் சேரும்போது மகாலட்சுமி யோகம் உண்டாகிறது. இந்த மகாலட்சுமியோகத்தால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
மேஷ ராசி: இந்த ராசியினருக்கு 11ஆம் இல்லத்தில் சுக்கிரன், செவ்வாய் இணைவால், மேஷ ராசியினருக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகின்றன. இந்த கிரக சேர்க்கையால் பிறரிடம் சிக்கியிருக்கும் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வியாபாரத்தில் பொருள் ஈட்டும் வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ரத்த சொந்தத்தினர் இடையே மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுன ராசி: இந்த ராசியினருக்கு சுக்கிரன் - செவ்வாய் இணைவால் அதிகபட்ச நல்ல பலன்களைப் பெறுவர். தொழில் செழுமையாகும். நீங்கள் உங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த நற்பெயருக்கு மணிமகுடமாக விரைவில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். சகோதரர்கள் இடையே ஒற்றுமை பெருகும். வருவாய்க்குப் பிரச்னை இருக்காது.
துலாம் ராசி: இந்த ராசியினருக்கு சுக்கிரனும் செவ்வாயும் இணைவதால் வாழ்வில் இத்தனை நாட்களாக நஷ்டங்கள் எல்லாம் மறையும். தொழில் ரீதியாக வியாபாரம் செய்யும்போது, சுணக்கமாகவும் மந்தமாகவும் இதற்கு முன் இருந்தால் இனிமேல் அது சரியாகும். முகம்தெரியாதவர்களிடத்தில் இருந்து அதிக உதவிகளைப் பெறுவர். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர்.
விருச்சிக ராசி: இந்த ராசியினருக்கு சுக்கிர பகவானும் செவ்வாயும் இணைவதால், இத்தனை நாட்களாக பொருளாதாரத்தில் நலிவுற்ற விருச்சிகராசியினர் மேம்படுவர். தொழில் முனைவோருக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் புதிய ஆர்டர் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் தங்கம், நிலம், வீட்டடி மனை ஆகிய ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். உங்களது வீட்டில் இருந்த மனக்குழப்பங்கள் படிப்படியாக குறையும்.
கும்ப ராசி: இந்த ராசியினருக்கு சுக்கிர பகவான் மற்றும் செவ்வாய் இணைவதால் தொழிலில் ஏராளமான நன்மைகள் கிடைக்கப்போகின்றது. சனிபகவானின் ஆளுகைக்கு உட்பட்டு துன்பப்பட்டாலும், நிறையநாட்களாக இழுபறியாக இருந்த பணிகள் நடக்கும். உங்கள் பார்ட்னரால் வெற்றி கிட்டும். உங்கள் எதிர்கால வாழ்வுக்காக சேமிப்பினை முன்னிலைப் படுத்துவீர்கள். கணவன் - மனைவி இடையே இருந்த சண்டை சச்சரவுகள் சரியாகும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்