Vastu Tips for Kitchen: ’உங்கள் வீட்டு சமையல் அறை இப்படி இருந்தால் தரித்திரம் உறுதி!’ சமையல் அறைகளுக்கான வாஸ்து குறிப்பு
வாஸ்துசாஸ்திரம் நம் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, சமையலறை ஒரு புனிதமான இடம். சமையலறை கட்டுவதற்கு முன், வாஸ்து சாஸ்திரத்தை மனதில் கொள்ள வேண்டும்.
வாஸ்து சாஸ்திரம் என்பது இந்தியாவின் பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு பற்றி விவரிக்கும் சாஸ்திரம் ஆக உள்ளது.
ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் முறைகளை வேதம் சார்ந்து வாஸ்து விளக்குகின்றது. வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை நோக்கம், மனிதர்களும் இயற்கையும் ஒற்றுமையாக இணைந்து வாழும் ஒரு சூழலை உருவாக்குகிறது என்பது வாஸ்து நிபுணர்களின் கூற்றாக உள்ளது.
வாஸ்து சாஸ்திரம் என்பது உடல் நலம், மன அமைதி, பொருளாதார வளர்ச்சி, சொத்து மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றுக்கு வாஸ்து காரணமாக அமைகின்றது.
வாஸ்து சாஸ்திரத்தின்படி உங்கள் சமையலறை எப்படி இருக்க வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
தென்கிழக்கு திசை
வாஸ்து சாஸ்திர விதிகளின்படி, வீட்டில் சமையலறை தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் இருக்க வேண்டும். இந்த திசையில் சமையலறை இருப்பது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து நன்மைகளை கொண்டு வரும் என்று நம்பப்படுகின்றது. .
அடுப்பு எங்கு இருக்க வேண்டும்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, சமையலறையில் அடுப்பு எப்போதும் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். சமையல் செய்பவர் எப்போதும் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்.
மடு (sink) எங்கு இருக்க வேண்டும்
வாஸ்து சாஸ்திரத்தின் படி வடமேற்கு திசையில் மடு (sink) இருக்க வேண்டும். சமையலறையில் அடுப்புக்கும் மடுவுக்கும் இடையே நிறைய தூரம் இடைவெளி இருக்க வேண்டும். சமையலறையும் மடுவும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கக்கூடாது.
அலமாரிஎங்கு இருக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திர விதிகளின்படி, சமையலறையின் மேற்குச் சுவரில் சமையலறை பாத்திரங்களை வைக்கும் அலமாரிகளை வடிவமைக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களை காலியாக வைக்க வேண்டும்.
மின்சாதன பொருட்கள் எங்கு?
மைக்ரோவேவ், ஃப்ரிட்ஜ், மிக்சி போன்ற அனைத்து மின்சாதனங்களையும் தெற்கு திசையில் வைக்க வேண்டும்.
ஜன்னல் எங்கு இருக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, சமையலறையில் ஜன்னல் இருப்பது மிகவும் முக்கியம். கிழக்கு திசையில் ஜன்னல்களை வடிவமைப்பு செய்வது நல்லது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்